"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, July 18, 2015

ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா




அட்சரம் ஏற்பாட்டில் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா 18.07.2015 சனிக்கிழமை மாலை யாழ் பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக கலை இயக்குநர் மற்றும் ஓவியராகிய ட்றொஸ்கி மருது அவர்களும் இயக்குநர் கவிதாபாரதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் ஞானதாஸ், கோ. கேதாரநாதன் ஆகியோரும் அதிதிகளுடன் இணைந்து உரையாற்றினர்.

முதலாம் இடம் பெற்ற குறும்படம் : வெள்ளம் (விமல்ராஜ்)
இரண்டாம் இடம்பெற்ற குறும்படம் : கடிநகர் ( சஜீத்)
மூன்றாம் இடம்பெற்ற குறும்படம் : தொடரி (மதிசுதா)


தனியாள் விருது பெற்ற குறும்படங்கள்

சிறந்த கதைக்கான விருது : சூசைட்
சிறந்த இயக்குநர் விருது : கடிநகர்
சிறந்த நடிகருக்கான விருது : போலி
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது : வெள்ளம்
சிறந்த இசைக்கான விருது : ஏன் இந்த இடைவெளி
சிறந்த படத்தொகுப்புக்கான விருது : சூசைட்
சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருது : வெள்ளம், தேவதை
சிறப்பு விருது : ஏன் இந்த இடைவெளி













- பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்

Friday, July 17, 2015

“வழக்குச் சொல்லகராதி” நூல் வெளியீடும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டமும்




கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவை 17.07.2015 வெள்ளி முற்பகல் “வழக்குச் சொல்லகராதி” நூல் வெளியீட்டையும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்தையும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்த்தியது. பிரதேச செயலர் ச. சிவசிறீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அ. சிவஞானசீலன் எழுதிய “வழக்குச் சொல்லகராதி” என்ற நூல் வெளியிடப்பட்டது. நூல் தொடர்பான உரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை பிரதேச செயலரிடம் இருந்து எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதியை புளியங்குளம் ஆரம்பப்பாடசாலை ஆசிரியர் திரு செ. லக்மிகாந்தன் பெற்றுக்கொண்டார்.

“தமிழ்ப்பண்பாட்டில் ஆடிப்பிறப்பு” என்னும் பொருள்பற்றி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை..” என்ற பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இறுவெட்டின் முதற்பிரதியை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பிரதேச செயலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அற்புதனின் இசையில் திருமதி ஜெயபாரதி கௌசிகன் மேற்படி பாடலை பாடியுள்ளார். அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன் & ஹரிஸ்.

மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.