தொகுப்பும் பதிவும் :- சு. குணேஸ்வரன்
நூல் வெளியீடுகள்
1. ‘விமலம்’ நினைவு நூல்
நெல்லியடி maths centre நிர்வாகியாக இருந்து மறைந்த சிற்றம்பலம் விமலராஜா அவர்களின் நினைவு வெளியீடு 04.10.2009 அன்று நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நிறுவனத்தின் ஆசிரியர்கள் நினைவுரைகளை நிகழ்த்தினர். நூல் பற்றிய மதிப்பீட்டுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். ஏற்புரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். க. பொ. த (உ/த) மாணவர்களுக்கான கட்டுரைகள் அடங்கிய பயனுள்ள தொகுதியாக விமலம் நினைவு மலர் அமைந்திருந்தது.
2. அ. பெளநந்தியின் ‘கணேசலிங்கனின் நாவல்கள் ஓர் ஆய்வு’
அ. பெளநந்தியின் ‘செ. கணேசலிங்கனின் நாவல்கள் - ஓர் ஆய்வு’ நூல் வெளியீடு 11.10.2009 கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வை. செல்வராஜா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வாழ்த்துரைகளை கலாநிதி ம. இரகுநாதன்> பிரதேச செயலர் சி. சத்தியசீலன் ஆகியோர் நிகழ்த்தினர். வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் ஆய்வுரைகளை கலாநிதி த. கலாமணி>
ஈ. குமரன்>ஆகியோரும் ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர். முதற்பிரதியை ஓய்வுபெற்ற அதிபர் கி. நடராஜா பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியர் முகவரி :- அ. பெளநந்தி, துன்னாலை வடக்கு, கரவெட்டி.
3. கமலசுதர்சனின் ‘அவல அடைகாப்பு’ கவிதைத்தொகுதி
கமலசுதர்சனின் ‘அவல அடைகாப்பு’ என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 01.11.2009 பருத்தித்துறை அறிவோர் கூடல் முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இலக்கியச் சோலை து. குலசிங்கம் தலைமை தாங்கினார். அறிமுகவுரையை செல்வி தி. சிவதர்சினியும் வெளியீட்டுரையை கொற்றை பி. கிருஷ்ணானந்தனும் மதிப்பீட்டுரைகளை இராஜேஸ்கண்ணன், த. அஐந்தகுமார் ஆகியோரும் நிகழ்த்தினர். நயப்புரையை நிமலனும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர்.
நூலாசிரியர் முகவரி :-
k.sutharsan,ambikai vasam,branmin’s lane, thumpalai west, thumpalai,point pedro.
4. அஐந்தகுமாரின் இரண்டு நூல்கள்
ஒரு சோம்பேறியின் கடல் (கவிதைத் தொகுதி)
தனித்துத் தெரியும் திசை (ஆய்வு நூல்)
ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு 08.11.2009 நெல்லியடி தடங்கன் புளியடி மண்டபத்தில் பேராசிரியர் செ. கிருஷ்ணராசா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையினை சி. திருச்செந்தூரனும் அறிமுகவுரையை இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர். வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும்: நூல்கள் பற்றிய கருத்துரைகளை கலாநிதி த. கலாமணி, குப்பிழான் ஐ. சண்முகன்,க. அருந்தாகரன், ந. மயூரருபன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
நூலாசிரியர் முகவரி :-
த. அஐந்தகுமார், யார்வத்தை, வதிரி, கரவெட்டி,
mail: ajanthan84@yahoo.com
5. தெணியான் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு – நூல் வெளியீடு
எழுத்தாளர் தெணியானின் சகோதரி பாக்கியவதி சரவணமுத்து மறைவின் 31 ஆம் நாள் நினைவு வெளியீடாக தேவகி ரமேஷ்வரன் எழுதிய ‘தெணியான் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. 29.11.2010 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் நிகழ்வுக்கு கலாநிதி த. கலாமணி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் நிகழ்த்தினார்.
6. ‘திருவுடையாள்’ பிரதேசமலர்
கரவெட்டி பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் திருவுடையாள் - 2 பிரதேச மலர் வெளியீடு 05.12.2009 சனிக்கிழமை இடம்பெற்றது. பிரதேச செயலர் சி. சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வரவேற்புரையை கலாசார அபிவிருத்தி உதவியாளர் செ. ரூபகுமாரும், அறிமுகவுரையை ஓய்வுபெற்ற அதிபர் கி. நடராஜாவும், வெளியீட்டுரையை காரைநகர் உதவி அரசாங்க அதிபர் த. ஜெயசீலனும், நிகழ்த்தினர்.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் அரசாங்க அதிபர் க. கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை செல்லமுத்தூஸ் உரிமையாளர் ச. பிறேம்குமார் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மலருக்கான அட்டைப்படத்தை வடிவமைத்த ஓவியர் கோ. கைலாசநாதன் கெளரவிக்கப்பட்டார்.
ஆய்வுரையை பேராசிரியர் இரா. சிவச்சந்திரனும் ஏற்புரையை கலாநிதி த. கலாமணியும் நிகழ்த்தினர். நன்றியுரையை கலாசார உத்தியோகத்தர் செல்வி சே. செல்வசுகுணா நிகழத்தினார்
நூல் விபரம் :- பக்கம் 191+ xxxiii, விலை 500
முகவரி:- கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், வடமராட்சி தெற்கு மேற்கு, கரவெட்டி.
7. மு.ஆ சுமனின் ‘மரணித்த மனிதம்’ கவிதை நூல்
மு. ஆ. சுமனின் ‘மரணித்த மனிதம்’ கவிதை நூல் வெளியீடு வல்வை சிவகுரு வித்தியாலய அதிபர் எஸ் சிவநாதன் தலைமையில் வல்வை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் 06.12.2009 அன்று இடம்பெற்றது. நிகழ்வில் வாழ்த்துரைகளை அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா, பொன் சுகந்தன், ரி. விஜயகுமார் ஆகியோரும் அறிமுகவுரையை கு. அப்பாத்துரையும் நிகழ்த்தினர். நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வடமாரட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. புஸ்பலிங்கம் நூலை வெளியிட்டு வைத்தார்.
நூல் மதிப்பீட்டுரையை சு. குணேஸ்வரனும் ஏற்புரையை நூலாசிரியரும், நன்றியுரையை மு. நரேனும் நிகழ்த்தினர். நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் செல்வி செல்வசுகுணா சிறப்புரை நிகழ்த்தினார்.
நூலாசிரியர் முகவரி :-
மு. ஆ சுமன், சுகந்தினி வாசம், ஏ.ஜி.ஏ லேன், நெடியகாடு, வல்வெட்டித்துறை. Mail: valvaisuman@yahoo.com
8. தெணியான் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு – நூல் வெளியீடு
எழுத்தாளர் தெணியானின் சகோதரி பாக்கியவதி சரவணமுத்து மறைவின் 31 ஆம் நாள் நினைவு வெளியீடாக தேவகி ரமேஷ்வரன் எழுதிய ‘தெணியான் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. 29.11.2010 அன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கலாநிதி த. கலாமணி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் நிகழ்த்தினார்.
அவை நிகழ்வுகள்
கலாநிதி த. கலாமணி அவர்களின் ஒருங்கிணைப்பில் அவை என்ற அமைப்பினூடாக இலக்கியக் கலந்துரையாடல் மாதாந்தம் நடைபெற்று வருகின்றது. அந்நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
1. இலக்கியக் கலந்துரையாடல் -
02.11.2009 அன்று ‘புறநானூறு ஒரு சமூகவியற் பார்வை’ என்ற பொருளில் திரு சி. வன்னியகுலம் உரை நிகழ்த்தினார்.
2. இலக்கியச் சந்திப்பும் ‘ஜீவநதி’ கவிதைச் சிறப்பிதழ் அறிமுகமும் -
29.11.2009 அன்று ‘பின்நவீனத்துவ உளவியற் பார்வையில் இலக்கியம்’ என்ற பொருளில் இராஜேஸ்கண்ணன் உரை நிகழ்த்தினார். அன்றையதினம் ‘ஜீவநதி’ கவிதைச் சிறப்பிதழ் பற்றிய அறிமுக உரையை திரு பா. மகாலிங்கசிவம் நிகழ்த்தினார்.
3. தெணியான் பற்றிய பார்வை:
கனடா ‘காலம்’ இதழ் இம்முறை எழுத்தாளர் தெணியான் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அவ்விதழ் பற்றிய அறிமுகமும் தெணியானுக்கான கெளரவிப்பு நிகழ்வும் 27.12.2009 அன்று அவை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நிகழ்வில் காலம் தெணியான் சிறப்பிதழ் பற்றிய உரையினை இரா. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். தெணியான் அவர்கள் நாவேந்தன் விருது, ஆளுநர் விருது பெற்றுக் கொண்டமைக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது.
4. புலோலியூர் இரத்தினவேலோனுடன் சந்திப்பு -
புலோலியூர் இரத்தினவேலோனுடனான சந்திப்பு 05.01.2010 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ‘ பதிப்பிலக்கியத்தில் எனது அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இரத்தினவேலோன் உரை நிகழ்த்தினார். தனது நூல் வெளியீடுகளில் 100 வது வெளியீடாக வடமராட்சிப் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு வரும் எண்ணத்தினையும் நிகழ்வில் தெரிவித்தார்.
அறிவோர் கூடல் நிகழ்வுகள்
இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் மாதாந்தம் அறிவோர் கூடல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது
1. 06.12.2009 ‘இறையியல் விடுதலை’ என்னும் தலைப்பில் அருட்தந்தை எஸ். டேமியன் உரை நிகழ்த்தினார்.
2. 13.12.2009 அன்று ‘அகதி முகாம் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் உரை நிகழத்தினார்.
3. 03.01.2009 அன்று ‘புலம்பெயர் நாவல்கள்’ என்றும் தலைப்பில் சு. குணேஸ்வரன் உரை நிகழத்தினார்.
4. 08.01.2010 அன்று மனித உரிமைக் குழுவினருடனான சந்திப்பு இடம்பெற்றது.
தொகுப்பும் பதிவும் :- சு. குணேஸ்வரன்