Saturday, March 31, 2012

‘என் கடன்’ கவிதைநூல் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வும்





யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் வே.ஐ வரதராஜனின் ‘என் கடன்’ என்ற கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா 31.03.2012 சனிக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கலாநிதி செ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

வரவேற்புரையை இலங்கை இலக்கியப் பேரவை செயலாளர் சி. சிவதாசன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை யாழ்பல்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி நிகழ்த்தினார். நூலின் முதன்மைப் பிரதியை செ. செல்வநாதன் பெற்றுக்கொண்டார்.

மதிப்பீட்டுரைகளை கவிஞர் சோ. பத்மநாதன் மற்றும் விரிரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையையை நூலாசிரியர் ஐ. வரதராஜன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஐயாத்துரை ஞாபக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. விருதுரையை யோஜேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்தினார். விருதினை மூத்த எழுத்தாளர் தெணியான் வழங்கிச் சிறப்பித்தார்.

2009 ஆம் ஆண்டுக்குரிய கவிஞர் ஐயாத்துரை விருதினை அல் அஸமத் எழுதிய ‘குரல் வழிக்கவிதைகள்’ என்ற நூலும் 2010 ஆம் ஆண்டுக்குரிய கவிஞர் ஐயாத்துரை விருதினை கவிஞர் சோ. பத்மநாதனின் ‘சுவட்டெச்சம்’ என்ற நூலும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றியுரையை யாழ் இலக்கிய வட்ட செயலாளர் கிருபானந்தா நிகழ்த்தினார்.

பதிவு - சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் வ. வித்தியாபரன்













Sunday, March 18, 2012

யோ. கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ அறிமுகநிகழ்வு




யோ. கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ சிறுகதைத் தொகுதி அறிமுகநிகழ்வும் கலந்துரையாடலும் 18.03.2012 ஞாயிறு காலை யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார்.

நூல் பற்றிய உரைகளை தேவா, குலசிங்கம், நிலாந்தன், கருணாகரன், குருபரன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை துவாரகன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
படங்கள் - துவாரகன்









Sunday, March 11, 2012

அநாதரட்சகனின் ‘நிமிர்வு’ சிறுகதைத் தொகுதி வெளியீடு



எழுத்தாளர் அநாதரட்சகனின் ‘நிமிர்வு’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா 11.03.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். வாழ்த்துரைகளை வே. சிவராஜலிங்கம், க.கணேசன், க. சின்னராஜன் ஆகியோர் நிகழ்த்தினர். வரவேற்புரையை வே. சிவயோகன் நிகழ்த்தினார்.

தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் வெளியீட்டுரையினையும் இ.இராஜேஸ்கண்ணன், சு.குணேஸ்வரன் ஆகியோர் மதிப்பீட்டுரையினையும் நிகழ்த்தினர்,

நூலின் முதற்பிரதியினை உதயன் பூட்வெயர்ஸ் மா புவனேந்திரன் பெற்றுக்கொண்டார். ஏற்புரையினை நூலாசிரியர் அநாதரட்சகனும் நன்றியுரையை இராஜவரோதயனும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
















Wednesday, March 7, 2012

‘தரிசனம்’ சிறுகதைத் தொகுதி விமர்சன உரை


பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் 04.03.2012 அன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட ‘தரிசனம்’ என்ற சிறுகதைத்தொகுதி மீதான விமர்சன உரை நிகழ்வு இடம்பெற்றது.

உரைகளை வேல் நந்தகுமாரும் சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். தொக்கவுரையை து. குலசிங்கம் நிகழ்த்தினார், நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் சில.