Sunday, December 22, 2013

இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா



கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2013 ஞாயிறு காலை செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச சிவசிறீ தலைமையில் இடம்பெற்றது.

வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் அ. சிவஞானசீலன் நிகழ்த்தினார். ந.மயூரூபனின் சொற்குவியம் த. அஜந்தகுமாரின் படைப்பின் கதவுகள் என்ற இரண்டு நூல்களுக்குமான வெளியீட்டுரையை வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளர் திரு சி. சத்தியசீலன் நிகழ்த்தினார்.
அறிமு உரைகளை கை. சரவணன், சி. திருச்செந்தூரன் ஆகியோரும் மதிப்பீட்டுரைகளை தி. செல்வமனோகரன், இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

ஏற்புரைகளை நூலாசிரியர்களும் நன்றியுரையை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. ரூபகுமாரும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் : நன்றி - யாத்திரிகன்.





















ஒளிப்படங்கள் : நன்றி - யாத்திரிகன்.

கு. றஜீவனின் "ஒரு பெருந்துயரும் இலையுதிர்காலமும்"





கு. றஜீவனின் "ஒரு பெரும்தயரமும் இலையுதிர்காலமும்" என்ற கவிதை நுால் அறிமுக நிகழ்வு 14.12.2013 அன்று திருநெல்வேலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிலாந்தன், கருணாகரன், ரமேஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் ஈழத்து இலக்கிய செல்நெறிதொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.




படங்கள் : நன்றி - கு. றஜீபன் 

மனோகரியின் “மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்” கவிதைநூல் வெளியீடு




தி. செல்வமனோகரனின் ஏற்பாட்டில் 16.12.2013 திங்கள் காலை திருநெல்வேலியில் மனோகரியின் “மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்” கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

கவிஞர் சோ. பத்மநாதன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். நூல் பற்றிய உரைகளை தானாவிஷ்ணு, சி. ரமேஷ் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் மனோகரியும் நன்றியுரையை தி. செல்வமனோகரனும் நிகழ்த்தினர்.

நூலுக்கு முன்னுரையை கவிஞர் சோ. பத்மநாதனும், ‘ஒன்றுபோலவே இருக்கும் வெவ்வேறு நதிகள்’ என்ற பிற்குறிப்பை கவிஞர் அனாரும் எழுதியிருக்கின்றனர்.

தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
‘இடைவெளிகள்’
- மனோகரி
நதி
மலைவிட்டிறங்கித்
தனித்துப் போனது

சோர்வுகளும்…
தூரப்பார்வைகளும் மட்டுமே துணையாய்
எதிரொலிக்க யாருமின்றி
பிரிந்து போனது…!

குரலில் ஒலித்த
உண்மைகளின் அர்த்தம் புரியாது
‘மரபுகளில்’ மயங்கிப்போன
மலையைவிட்டு நழுவிப்போனது

மலைக்கு
தழுவும் முகில்களின் துணை உண்டே?
ஆனால் மேகங்கள் நிலையற்றவை.

Tuesday, December 10, 2013

தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி - மீராபாரதியின் இரண்டு நூல்கள் அறிமுக நிகழ்வு





மீராபாரதி எழுதிய “பிரக்ஞை ஓர் அறிமுகம்”, “மரணம் இழப்பு மலர்தல்” ஆகிய இரண்டு நூல்களுக்குமான அறிமுக நிகழ்வு 08.12.2013 மாலை 4.30 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கட்டளை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு நூலகர் அ. சிறீகாந்தலட்சுமி தலைமை வகித்தார். நூல்கள் பற்றிய உரைகளை டாக்டர் சிவயோகன், நிலாந்தன், தமிழ்க்கவி, கருணாகரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
(ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன்)

தொடர்புடைய இடுகை (காணொளி) :மீராபாரதியின் நூல் அறிமுக நிகழ்வு உரைகள்







Saturday, December 7, 2013

கலை இலக்கிய விழா 2013 - கரவெட்டி பிரதேச செயலகம்



வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரபேரவை நடாத்திய கலை இலக்கிய விழாவும் திருவுடையாள் - 4 மலர் வெளியீடும் 05.12.2013 வியாழன் காலை, மாலை அரங்குகளாக மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்றது. மேற்படி விழாவில் கலை நிகழ்வுகள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்குதல், கலைஞர் கௌரவிப்பு, மலர் வெளியீடு ஆகியன இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில படங்களைத் தருகிறேன்.
(படங்கள் - சு. குணேஸ்வரன்)


 காலை நிகழ்வுகள்

 பிரதேச செயலர் திரு ச. சிவஶ்ரீ அவர்கள்  தலைமையுரை நிகழ்த்துகிறார்.
 



















மாலை நிகழ்வுகள்