Sunday, October 19, 2014

அனந்தியின் டயறி, பெர்லின் நினைவுகள் வெளியீட்டு நிகழ்வு




யாழ் இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் பொ. கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள், அனந்தியின் டயறி ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 19.10.2014 ஞாயிறு, பிற்பகல் 3.30 மணிக்கு திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் திரு இ. செல்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

வரவேற்புரையை செல்வி கி. பிறைநிலா நிகழ்த்தினார். பெர்லின் நினைவுகள் நூலுக்கான அறிமுகவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்த மதிப்பீட்டுரையை நிலாந்தன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை இ. து. குலசிங்கம் நிகழ்த்தினார். நூற்பிரதியை க. அருந்தாகரன் பெற்றுக்கொண்டார்.

அனந்தியின் டயறி என்ற நாவலின் அறிமுகவுரையை கருணாகரன் நிகழ்த்த அதன் மதிப்பீட்டுரையை க. சட்டநாதன் நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் தி. வேல்நம்பி நிகழ்த்தினார். நூற்பிரதியை கலாநிதி கந்தையா சிறீகணேசன் பெற்றுக்கொண்டார்.

பொ. கருணாகரமூர்த்தியின் ஏற்புரையும் வேலணையூர் தாஸின் நன்றியுரையும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் பொ. கருணாகரமூர்த்தியுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

படங்கள் : சு.குணேஸ்வரன், கி. பிறைநிலா


























Friday, October 17, 2014

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு



   தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 16.10.2014 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வாசிப்பு மாத நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

   ஆசிரியர் ஆ. வினோதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் திருமதி கௌரி சேதுராஜா அவர்கள் வாழ்த்துரையை நிகழ்த்தினார். நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞருமாகிய த. ஜெயசீலன் அவர்கள் “மாணவர்களிடையே வாசிப்பின் அவசியம்” என்பது பற்றி உரை நிகழ்த்தினார். அன்றையதினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் மிக ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(படங்கள்: ஆ.வினோதன், பதிவு: சு.குணேஸ்வரன்)