வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபை வதிரி பொதுநூலகத்தில் இடம்பெற்ற வாசிப்புமாத 10 வது நிகழ்வாக வடமராட்சிப் படைப்பாளிகளின் நூல்களும் தமிழர் பாராம்பரிய அரிய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேற்படி நிகழ்வு 31.10.2014 வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணிக்கு நூலக வாசகர்சேவைப் பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் இருந்து திருமதி என் யாதவன் (OIC) வருகைதந்து நிகழ்வினை தொடக்கிவைத்தார்.
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் நடாத்தப்பட்ட
ஓவியப்போட்டியில் வெற்றிபெற்றவை
வதிரி பொதுநூலகத்தின் 2014 ஆம் ஆண்டு
தேசிய வாசிப்பு மாத மகுட வாசகம்
தேசிய வாசிப்பு மாத மகுட வாசகம்
16.10.14 இல் கரணவாய் ம.வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத முதலாவது நிகழ்வு"வாசிப்பின் முக்கியத்துவம்' பற்றி நூலகர் உரையாற்றுகிறார்.
தேசிய வாசிப்பு மாத இரண்டாவது நிகழ்வு 17.10.14அன்று வரிரி முன்பள்ளியில் இடம்பெற்றபோது...நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் செயலாளரும் தவிசாளரும் நிகழ்வினை ஆரம்பித்து வைக்கின்றனர்.
வதிரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் நடாத்தப்பட்ட நடமாடும் நூலக சேவையினையும் அதில் பங்குபற்றிய மாணவர்களையும் காணலாம்
வதிரி முன்பள்ளியில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில்...