Sunday, June 30, 2024

'மலையகா' அறிமுகமும் உரையாடலும்...

 


ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி 'மலையகா' அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை, யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), கலாநிதி சு.குணேஸ்வரன்(எழுத்தாளர்), செ.ரினோஷன்(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வை ஒழுங்கமைத்த தர்சிகா (பெண்ணிய செயற்பாட்டாளர்) நன்றியுரை நிகழ்த்தினார். ஊடறு வெளியிட்ட மேற்படி தொகுப்பில் 23 மலையகப் பெண்களின் 42 கதைகள் உள்ளடங்கியுள்ளன.

நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள்.
















Tuesday, May 7, 2024

'இமிழ்' கதைத்தொகுப்பின் அறிமுகமும் விமர்சனமும்

 



பிரான்சில் நடைபெற்ற 51ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பெற்ற 'இமிழ்' கதைத்தொகுப்பின் அறிமுகமும் விமர்சனமும் யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் 04.05.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வுக்கு சு.குணேஸ்வரன் தலைமை வகித்தார். உரைகளை, பேராசிரியர் அ.ராமசாமி, இ.இராஜேஸ்கண்ணன், தானாவிஷ்ணு, மயூரரூபன், கிரிஷாந் ஆகியோர் நிகழ்த்தினர். ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து எழுதிவரும் 25 படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நிகழ்வின் இறுதியில் பங்குபற்றியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

(ஒளிப்படங்களுக்கு நன்றி:கருணாகரன், வசீகரன்)