மேற்படி நிகழ்வில் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து ‘க்ரியாவின் தற்காலத் தமிழகராதி’ தொகுப்பில் இலங்கைச் சொற்கள் 1700 இடம்பெற பங்கெடுத்தவரும் ராமகிருஷ்ணனின் நட்புக்குரியவருமான இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக பிறெய்லி அகராதியை வாழ்வகத் தலைவர் ரவீந்திரன் அவர்களிடம் கையளித்தார்.
மேற்படி நிகழ்வில் து. குலசிங்கம், சுன்னாகம் பொதுநூலகர் செளந்தரராஜன், கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம், பா.துவாரகன், வாழ்வக மாணவன் க.கலைச்செல்வன், டாக்டர் வெ. நாகநாதன், வாழ்வக உதவிச் செயலாளர் v.k.ரவீகரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றினர்.
இறைவணக்கப்பாடலை வாழ்வகம் இல்ல மாணவன் கு.ஜெயதீசன் அவர்கள் இசைத்தார்.
தொடர்ந்து ரவீந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வாழ்வகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி இல்லப்பிள்ளைகளின் கல்விநிலை ஆகிய பற்றிக் குறிப்பிட்டு இந்த அகராதி சுலபமாக கிடைக்கக்கூடியதல்ல. இன்று க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் பெருமனதோடு வழங்கியிருக்கிறார். எங்கள் வாழ்வகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெறுமதியான ஓர் உதவியைச் செய்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். என்று குறிப்பிட்டார்.
குலசிங்கம் அவர்கள் பேசும்போது “ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்தர்ப்பத்தில் கதைக்கும்போது இவ்வாறான பிறெய்லி அகராதி பதிப்பு வரவுள்ள செய்தி அறிந்துகொண்டேன். அப்போது நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்டபோது பிறெய்லி அகராதி தேவைப்படும் நிறுவனங்களிடமிருந்து வேண்டுகைக் கடிதங்களைப் பெறவிரும்பியிருந்தார். இதற்குரிய வேண்டுகைக் கடிதங்களை கரிசனையுடன் பா.துவாரகன் பெற்றுத் தந்தார். க்ரியாவின் நிறுவுனர்களில் ஒருவராகிய காலஞ்சென்ற வி.ஜெயலட்சுமியின் பிறந்தநாளைக் குறிக்கும்முகமாக சுன்னாகம் ‘வாழ்வகம்’ பார்வையற்றோர் இல்லத்திற்கு கொடுப்பதே பொருத்தமானது என ராமகிருஷ்ணன் முடிவுசெய்து 52 தொகுதிகள் உள்ளடங்கிய பிறெய்லி அகராதியை கொடுத்துதவியிருக்கிறார். உண்மையில் நல்ல ஒரு காரியம். தேவைப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் என்றும் நன்றிக்குரியவர்” என்று குறிப்பிட்டார்.
மேலும் உரைகளை சுன்னாகம் பொதுநூலகர் செளந்தரராஜன், பா.துவாரகன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையினை வாழ்வக உதவிச் செயலாளர் v.k ரவீகரன் நிகழ்த்தினர். இந்தச் செயற்பாட்டுக்கு உதவியதற்காக இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களுக்கு சுன்னாகம் பொதுநூலக நூலகர் திரு செளந்தரராஜன் அவர்கள் மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
மிக எளிமையாக இல்ல மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மனதிற்கு மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது.
http://www.crea.in/Braille.html
ReplyDeleteஎன்ற தளத்தில் பிறெய்லி அகராதி பற்றிய கிரியாவின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மிக அருமையான பணி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மைதான் டொக்டர். பல சமூக வேலைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது க்ரியா ராமகிருஷ்ணனின் பணி.
ReplyDeletevery useful contribution. i wish all the participants and crea.
ReplyDeletekrishnakumar
நண்பருக்கு நன்றி
ReplyDeleteமின்னஞ்சலில் பா. துவாரகன் கூறியது
ReplyDeleteDhuvarahan Balasubramaniam to me
show details Apr 17 (3 days ago)
படங்களுக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி
அன்புடன்
பா.துவாரகன்
போற்றுதற்குரிய பணி. பாராட்டுக்கள்.
ReplyDelete