Tuesday, May 29, 2012

From Noolaham Foundation

Thanks :- Noolaham Foundation

News/2012/19.05.2012

From Noolaham Foundation

Jump to: navigation, search

Details

  • Date - 19.05.2012
  • Venue - Kottavaththai social hall
  • Time - 03.45pm - 06.00pm

On last 19.05.2012 Saturday at 3.45 evening two events were organized by the 'Uyil Literary Association' at the Kottavaththai social hall in Vadamaraadchi, Jaffna. A book titled “Punaivum Puthithum” – ‘Research papers and others’ by Mr.S.Guneswaran was launched at the function. An introduction about the newsletter of Noolaham Foundation titled “Puthiya Noolaham” was also held. This event, which was organized on the intention of portraying the activities of Noolaham Foundation at regional levels, was presided by Poet Yaathirikan. The welcome address was presented by respected teacher K.Tharmadevan.

Mr.Yaathirikan who delivered his presidential address pointed out that the activities of the Noolaham Foundation which at present plays an immense role in the web sphere were being very keenly noted by the public. He added that in the contemporary electronic environment it was easily accessible to everyone. He continued to say that in the Noolaham Foundation which has uploaded about ten thousand documents, a just more than 25 documents were from the Vadamaraadchi environment and stressed that there was a necessity for increased contributions.

This was followed by a speech by Mr.T.Ajanthakumar on the topic of “Noolaham Foundation in the web sphere”. In his address he remarked the necessity and reasons for the emergence of the Noolaham Foundation and the services done by the volunteers all over the world which should have been done voluntarily by the government. He continued to state the nature of documents possessed by the Noolaham Foundation and the ways they were beneficial to the people. He too stated that we have the opportunity of having two libraries at our home and one was the E-book scheme and we ought to make the right use of it.

Followed by it, Mr.Sinnaraja Vimalan delivered an address on the topic “New Noolaham Newsletters”. Although he had an opportunity to read all the 12 newsletters published until now through Noolaham, he made his speech concerning 6 – 12 newsletters taking into consideration the time factor. He who briefed the facts written by contributors from A.Muthulingam to Ravikumar, continued to state the subjects contained by the New Noolaham, the information regarding occasions contained by them, introductory articles about creations, information regarding contributors were very important. He advised that it would be better if some important statistical data could be included in future. The event was attended by about 75 people including readers, enthusiasts and about 10-15 regional contributors. “Puthiya Noolaham” newsletters of series 7-12 were provided for all who attended the event. Particularly, copies were provided to regional libraries and schools. Moreover, copies of annual report, writer admission forms and the directory of documents on Noolaham by Vadamaraadchi personalities were also provided.

Finally, Mr.Guneswaran, the editor of “Puthiya Noolaham” and a member of the Noolaham communicational team delivered the vote of thanks. He mentioned that the event was organized on the intention of wide spreading the activities of Noolaham foundation which were useful to researchers, students and readers. He too stated that the interested should come forward to continue the services of the Noolaham Foundation. The event was over by 6.00 p.m. evening.

Invitation

 

20-05-2012.07.JPG

Photos

Thursday, May 24, 2012

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ நூல் அறிமுக நிகழ்வு




தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் தற்போது வித்தியாலயத்தின் ஆசிரியருமாகிய சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற நூலின் அறிமுக நிகழ்வு யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மண்டபத்தில் 24.05.2012 வியாழக்கிழமை பகல் 1.00 மணிக்கு இடம்பெற்றது.

வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆசிரியர் கா. யோகராஜா தலைமை வகித்தார். நிகழ்வில் முன்னதாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு இ. ஸ்ரீநடராஜாஇ பிரதி அதிபர் திரு சி. அழகேந்திரராஜா, ஆசிரியை திருமதி வானதி கதிர்காமலிங்கம், மாணவன் பி. பிரகலாதன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.

இறைவணக்கத்தினை செல்விகள் ப. நிலானி, ர. ரவிஞ்சா, யே. சங்கீதா ஆகியோரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவினை செல்வி க. கஜானாவும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் வரவேற்புரையினை திருமதி பாமினி வசீகரன் அவர்கள் நிகழ்த்தினார். வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் திரு இ. ஸ்ரீநடராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

நூல் நயப்புரைகளை ஆசிரியர்கள் திரு உதயசங்கர் (வதிரிவாசன்), திரு க. பொன்னம்பலம், திரு சூ. தர்சன் ஆகியோர் நிகழ்த்தினர். நூலாசிரியரின் ஏற்புரையைத் தொடர்ந்து ஆசிரியர் திருமதி யோ. மனோவிஜயா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்தர வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 ----




















Saturday, May 19, 2012

குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்; நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.



குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்; நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள் 19.05.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தை பூமகள் சமூக மண்டபத்தில் இடம்பெற்றன. 

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற தொகுதியும் நூலகம் நிறுவனத்தின் செய்திமடலாகிய ‘புதிய நூலகம்’ அறிமுக நிகழ்வும் கவிஞர் யாத்திரிகன் தலைமையில் இடம்பெற்றன. எழுத்தாளர் தெணியான், திரு த. இராஜதுரை, திரு த. தவேந்திரராஜா, திரு மா. அனந்தராஜன், திரு ம. கணேசலிங்கம், அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா, சி. க. இராஜேந்திரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் ஆசிரியர் க. தர்மதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் முதற்பிரதியையும் சிறப்புப்பிரதியையும் முறையே இலக்கிச்சோலை து. குலசிங்கம் அவர்களும், திரு த. இராசதுரை அவர்களும் பெற்றுக்கொண்டனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். 

எண்மிய நூலகமான 'நூலகம்' நிறுவத்தினால் வெளியிடப்படும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் ‘இணையவெளியில் நூலக நிறுவனம்’ என்ற பொருளில் உரையை எழுத்தாளரும் கவிஞருமான த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ‘புதிய நூலகம் செய்திமடல்கள்’ என்ற பொருளில் 6-12 வரையான இதழ்களைப் பற்றிய தனது பார்வையை சின்னராஜா விமலன் நிகழ்த்தினார். இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

வடமராட்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உயில் கலை இலக்கிய சங்கத்தின்' ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 வது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்


மங்கள விளக்கேற்றல்







உரைகள் மற்றும் வெளியீட்டு நிகழ்வு 












நிகழ்வுக்கு வருகை தந்தோர்.









நிகழ்வு முடிந்தபின் குசலம் விசாரிப்பு







நன்றி - உயில் 
http://uyilsociety.blogspot.com/2012/05/blog-post_19.html