Thursday, May 24, 2012

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ நூல் அறிமுக நிகழ்வு




தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் தற்போது வித்தியாலயத்தின் ஆசிரியருமாகிய சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற நூலின் அறிமுக நிகழ்வு யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மண்டபத்தில் 24.05.2012 வியாழக்கிழமை பகல் 1.00 மணிக்கு இடம்பெற்றது.

வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆசிரியர் கா. யோகராஜா தலைமை வகித்தார். நிகழ்வில் முன்னதாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு இ. ஸ்ரீநடராஜாஇ பிரதி அதிபர் திரு சி. அழகேந்திரராஜா, ஆசிரியை திருமதி வானதி கதிர்காமலிங்கம், மாணவன் பி. பிரகலாதன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.

இறைவணக்கத்தினை செல்விகள் ப. நிலானி, ர. ரவிஞ்சா, யே. சங்கீதா ஆகியோரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவினை செல்வி க. கஜானாவும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் வரவேற்புரையினை திருமதி பாமினி வசீகரன் அவர்கள் நிகழ்த்தினார். வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் திரு இ. ஸ்ரீநடராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

நூல் நயப்புரைகளை ஆசிரியர்கள் திரு உதயசங்கர் (வதிரிவாசன்), திரு க. பொன்னம்பலம், திரு சூ. தர்சன் ஆகியோர் நிகழ்த்தினர். நூலாசிரியரின் ஏற்புரையைத் தொடர்ந்து ஆசிரியர் திருமதி யோ. மனோவிஜயா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்தர வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 ----




















2 comments:

  1. வாழ்த்துக்கள்.
    இந்த word verification யை எடுத்துவிட்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டொக்டர். word verification ஐ எடுத்துவிட்டேன்.

      Delete