Monday, December 3, 2012

VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினம்’



வவுனியாவில் இயங்கும் ‘வரோட்’’ நிறுவனம் சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தினர்.

 கடந்த 03.12.2012 அன்று வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாற்றுவலுவுள்ளோரில் தையற்பயிற்சியளிக்கப்பட்ட ஒரு தொகுதியினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட “இழப்பினும் சக்தியுண்டு” என்ற இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. நிகழ்வில் மாற்றுவலுவுள்ளோரின் கலை நிகழ்வுகளும் கண்காட்சியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உரைகளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வவுனியா பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் செல்வி நந்தினி அவர்களும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ADRA திட்டமுகாமையாளர் அவர்களும் நிகழ்த்தினர்.

சிறப்புரையை ஆசிரியர் சு. குணேஸ்வரனும், இறுவெட்டு உரையை தே. செந்துஜனும், நிறுவனத்தின் எதிர்காலத் திட்ட உரையை வரோட் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை அல்பேட் ஜோ. அருள்ராஜா அவர்களும் நிகழ்த்தினர். நன்றியுரையை வரோட் மாவட்ட இணைப்பாளர் இலங்கேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகிறேன்.

 பதிவு - சு. குணேஸ்வரன்

VAROD இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.




























No comments:

Post a Comment