Sunday, October 10, 2010

வடமாகாண தமிழ் இலக்கிய விழா 2010 - கிளிநொச்சி





பதிவும் படங்களும் :- சு.குணேஸ்வரன்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கிய விழா ஒக்டோபர் மாதம் 2ஆந் திகதி தொடக்கம் 5 ஆந் திகதிவரை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஆய்வரங்கம்> கலைநிகழ்ச்சிகள்> இலக்கிய நூல்களுக்கான விருது வழங்குதல்> ஆளுநர் விருது வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்த இவ்விழாவின் முதல்நாள் நிகழ்வுக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.
‘ஈழத்துத் தமிழ் இலக்கியமும் பெண்களும்’ தலைப்பே இவ்வருடம் ஆய்வரங்கத்திற்கான மகுடமாக இருந்தது. முதல்நாள் ஆய்வரங்கம் மங்களநாயகம் தம்பையா அரங்கில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் முதல்நாள் ஆய்வரங்கில் கலாநிதி செ. யோகராசா> கலாநிதி எஸ். மகேஸ்வரன்> அகளங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வரங்கின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பேராளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பாடசாலைப் பிள்ளைகள் முதல் கலைநிகழ்வுகளில் ஈடுபட்டனர். மீனவர் நடனம்> சல்லாரி நடனம்> குழுநடனம்> கோவலன் கூத்து> இராவணன் வருகை> அற்றைத் திங்கள் ஆகியன உட்பட பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
முதல்நாள் நிகழ்வுகளின் ஒளிப்படங்களை வலைப்பதிவு நண்பர்களின் பார்வைக்காகத் தருகிறேன்.
























2 comments: