Monday, October 18, 2010

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2010


கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் ஒக்டோபர் 23 மற்றும் 24 ஆந் திகதி இடம்பெறவுள்ளது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் ஆய்வரங்கம், கலைநிகழ்வு, விருது வழங்குதல் ஆகியன இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணிஅபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

ஆய்வரங்கம்

1. ஈழத்து நாவலும் பண்பாடும் - கலாநிதி செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்)

2. ஈழத்து நாடகமும் பண்பாடும் - எஸ். சிவரெத்தினம் (விபுலாநந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தின் விரிவுரையாளர்)

3. ஈழத்துச் சிறுகதையும் பண்பாடும் - ரமீஸ் அப்துல்லா (கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்)

4. ஈழத்துப் புகலிட இலக்கியமும் பண்பாடும் - சு. குணேஸ்வரன் (ஆசிரியர், வவு/நொச்சிக்குளம் இல 1, க.உ.வித்தியாலயம்)

5. ஈழத்துப் பாடநூல்களும் பண்பாடும் - கே. ரகுபரன் (தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்)

6. ஈழத்து நாட்டார் இலக்கியமும் பண்பாடும் - சட்டத்தரணி முத்துமீரான்

7. ஈழத்துச் சிறுவர் இலக்கியமும் பண்பாடும் - கேணிப்பித்தன் ச. அருளானந்தம்

8. ஈழத்து ஊடகங்களும் பண்பாடும் - வே. சகாதேவராஜா

9. ஈழத்துக் கவிதையும் பண்பாடும் - செல்வி த. உருத்திரகுமாரி (ஆசிரியர்)

10. ஈழத்துப் பெண்கள் இலக்கியமும் பண்பாடும் - ஞா. தில்லைநாதன் (தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்)

விருது பெறும் கலைஞர்கள்

1. சிறுகதை – முகமது சுல்தான் அமானுல்லா

2. நாடகம் - கனக. மகேந்திரா

3. நாட்டார் இசை – செல்வராச விபுணசேகரம்

4. ஆக்க இலக்கிம் - தம்பு சிவசுப்பிரமணியம்

5. சிறுவர் இலக்கியம் - எச். எம். தெளபீக்

6. இலக்கிய ஆய்வு – ரீ. கோபாலசிங்கம்

7. ஆக்க இலக்கியம் - சந்தியாப்பிள்ளை அரசரெத்தினம்

8. கிராமியக்கலை - மூத்ததம்பி அருளம்பலம்

9. கவிதை – தம்பிலெம்பை மீராலெப்பை

10. ஓவியம் - வீரன் தர்மலிங்கம்

11. வரலாற்று ஆய்வு – நாகமுத்து நவநாயகமூர்த்தி

12. இலக்கிய ஆய்வு – உதுமாலெப்பை அலியார்

13. கவிதை – பொன். சிவானந்தன்

14. சிறுவர் இலக்கியம் - உதுமாலெப்பை ஸெயின்

15. சித்திரக்கலை – எம்.ஏ அப்துல் ரசாக்

படைப்பிலக்கியங்களுக்கான விருது

1. சிறுவர் பாடல் - ‘சின்னக்குயில் பாட்டு’ திருமதி ஜெனீரா ஹய்றுள் அமான்

2. சிறுவர் கதை – ‘அற்புதமான வானம்’ ச. அருளானந்தம்

3. சிறுவர் நாடகம் - ‘பசுமைத்தாயகம்’ முத்து இராதாகிருஷ்ணன்

4. சிறுவர் கவிதை – ‘தாமரையின் ஆட்டம்’ கே. எம் எம். இக்பால்

5. சிறுகதை – ‘மேட்டு நிலம்’ மு. சடாட்சரன்

6. கவிதை – ‘காலமில்லாக் காலம்’ யூ.எல்.நபீல்

7. உயர்கல்வி (பொது) – ‘அரசறிவியல்’ வே. குணரத்தினம்

நன்றி :- தினக்குரல் 18.10.2010

No comments:

Post a Comment