Monday, February 20, 2012

அறிவோர் ஒன்றுகூடல் - மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்



கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

இந்நிகழ்வில் தொடக்கவுரையை து. குலசிங்கம் நிகழ்த்தினார். தமது இந்த வருகையின் நோக்கம் பற்றியும் கூத்துக்கலை சமூகத்தில் செலுத்தும் செல்வாக்குப் பற்றியும் சி. ஜெயசங்கர் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கூத்துக் கலைஞர் ஆனந்தன் அவர்களும் ஆட்டமுறைகள் பற்றி நிகழ்த்திக் காட்டினார்.

பா. இரகுவரன் மற்றும் து. குலசிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. நன்றியுரையை கந்தையா ஆசிரியர் நிகழ்த்தினார். மிக வித்தியாசமான ஒரு சந்திப்பாக; வட்டக்களரி அமைப்பில் இயற்கைச் சூழலில் நிகழ்ந்த இந்த நிகழ்வு மனதுக்கு நிறைவைத்தருவதாக அமைந்திருந்தது.


நிகழ்வில் இருந்து சில படங்களைத் தருகிறேன்.

பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன்
































5 comments:

  1. பாராட்டுகள்.14-02-2012அன்று கலாநிதி சி.ஜெய்சங்கர் அவர்கள் பண்டாரநாயக்கா
    சர்வதேசமாகாநாடு மண்டபத்தில்எல்லோரையும்தன்வசம்அடக்கிவைத்திருந்தார்.
    அமைதியான அரங்கு பத்து நிமிடங்களின்பின் கரகோஷ ஒலி எழுப்பியது.
    இராவணேசன்வேடம் தரித்துஅவரதுநடிப்பையும் இசைவழங்கியோரையும்
    பாராட்டியதை பார்த்தபோது பெரும்மகிழ்வாக இருந்தது.இராணேசன் அரங்கேறத்
    தொடங்கி ஆண்டு50ஆகிவிட்டது.பேராசிரியர் சி.மெளனகுருவில் ஆரம்பித்து இன்று கலாநிதிசி.ஜெய்சங்கரால்மேடைகாண்கிறது.பேராசிரியர் சரத்சந்திராவின்
    'சிங்கபாகு'வும் ஒரே காலத்து நாடகமாகும்.இரண்டுமே அன்று அரங்கேறின.
    பேராதனையில்தொடங்கிய இந்நாடகங்கள்இன்றும் உயிர்வாழ்கின்றன.நமதுகலை வடிவங்கள் வளர நமது கலைஞர்களுக்குஊக்கமளிப்பது நமது கடமையாகும்.
    இராவணேசன் நாடகத்தை ஒருமுறை வடமாராட்சியில் அரங்கேற்றுங்கள்.

    ReplyDelete
  2. நன்றி அண்ணா. கலாநிதி சி. ஜெயசங்கரும் அவருடன் இணைந்து வந்த குழுவினரும் அன்றையதினம் வடமராட்சியின் பருத்தித்துறைப் பிரதேசத்தில் மேலும் சில இடங்களுக்குச் சென்று இந்த ஆற்றுகையைச் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்திற்கு சிறப்பான ஆட்டமுறைகளையும் ஏனையவற்றையும் தமது மாணவர் பயில்வதற்கும் களமமைத்திருந்தார். அவர்களின் ஆர்வமும் செயற்பாடுகளும் வரவேற்புக்குரியது.

    நிச்சயமாக வடமராட்சியில் இராவணேசன் நாடகத்தைப் பார்ப்பதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

    ReplyDelete
  3. கலாநிதி ஜெய்சங்கர் அவர்கள் சிலகாலங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்தபோது காந்திகிராமபல்கலைக்கழகப் பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் இல்லத்தில்,[மதுரை] நடைபெற்ற குறுஅரங்க நிகழ்வொன்றில் சந்தித்தேன்.என் ஞாபகம் சரிதானா என்று கலாநிதி அவர்களிடம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்குரிய பேனா,
      கலாநிதி.சி.ஜெய்சங்கர் அவர்கட்கு இத்தகவலை தெரிவித்து உங்களுடன்தொடர்பு
      கொள்வேன்.
      அன்புடன்
      வதிரி.

      Delete
  4. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்தை அறிந்தால் கலாநிதி ஜெயசங்கர் அவர்கள் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete