"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Monday, August 2, 2010

புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை



பதிவு:- சு. குணேஸ்வரன்

பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் தமது உரையில் புகலிட இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகள்> பெண்களின் இலக்கிய சமூகச் செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர்.


நிகழ்வில்
தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும்> அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி சி. ரவீந்திரன்> குலசிங்கம்> குணேஸ்வரன்> அஜந்தகுமார்> இராகவன்> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> செ. கணேசன்> கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று
செய்யப்பட்டிருந்தது. பருத்தித்துறை அஞ்சலியகத்தில் வண பிதா டேமியன் அவர்களைச் சந்தித்து புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் றஞ்சி சுவிஸ் ரவி ஆகியோர் இன்னொரு தோழி மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு தொகைப் பணத்தை டேமியன் அவர்களிடம் கையளித்தனர். இலக்கிய நட்பின் மூலம் இவ்வாறான சீரிய பணியைச் செய்ய முன்வந்தவர்களை
நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.

No comments:

Post a Comment