"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, November 27, 2011

நெல்லிமரப் பள்ளிக்கூடம்




மேலதிக இணைப்பு-நிகழ்வு பற்றிய பத்திரிகைக் குறிப்பு 




நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா திருகோணமலை புனித பிரான்சிஸ் ம. வித்தியாலத்தில் 26.11.2011 சனிக்கிழமை இடம்பெற்றது.

நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு எஸ். ஆர் தனபாலசிங்கம் தலைமை வகித்தார். எஸ் சத்தியதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். நூல் வெளியீட்டினை கவிஞர் மேமன்கவி நிகழ்த்தினார்.

சிறுகதைத் தொகுதி பற்றிய கருத்துரைகளை க.யோகானந்தம், ஷெல்லிதாசன், லெனின் மதிவானம், கலாநிதி ந. இரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையை நூலாசிரியர் நந்தினி சேவியர் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
நன்றி (ஒளிப்படங்கள்) - வதிரி சி. ரவீந்திரன்.













நூல் பற்றிய முன்னைய குறிப்பு ஒன்று
http://vallaivelie8.blogspot.com/2011/08/blog-post.html

Friday, October 28, 2011

‘வள்ளுவம்’ மலர் வெளியீடு




கரணவாய் அண்ணாசிலையடி ‘வள்ளுவர் சனசமூக நிலையம்’ கடந்த 15.10.2011 அன்று தமது சனசமூகநிலையத்தின் 50 வது நிறைவு விழாவினையொட்டி ‘வள்ளுவம்’ என்ற மலர் வெளியீட்டையும் கலை நிகழ்வுகளையும் நிகழ்த்தியது. நிலையத் தலைவர் சி. தர்மகுலசிங்கம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மேற்படி நிகழ்வில் டாக்டர் வே. கமலநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நூல் வெளியீட்டுரையை இ. இராஜேஸ்கண்ணனும் நயப்புரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். அரங்க சிறப்புரையை தெணியான் நிகழ்த்தினார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்கள், 50 வது நிறைவுவிழாப் போட்டியில் பங்குபற்றிய வெற்றியாளர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் நிலையத்தின் செயற்பாட்டுக்கு முன்னோடியாக இருந்த மூத்தவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் நிகழ்வுகளின் படங்கள் சில.
பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்



வள்ளுவர் ச.ச நிலையத் தலைவர் சி. தர்மகுலசிங்கம்

டாக்டர் வே. கமலநாதன்

விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன்

சு. குணேஸ்வரன்

எழுத்தாளர் தெணியான்

திருமதி தி. அன்னலிங்கம்
(செயலாளர் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை)

த. புவனேந்திரன் 
(கிராம சேவையாளர், கரணவாய் வடக்கு)

கு. பாஸ்கரன் 
 (அதிபர், கரணவாய் மணியகாரன்தோட்டம் அ.த.க. பாடசாலை)

கொ. குணசிங்கம் 
(கரவெட்டி ச.ச நிலையங்களின் சமாசத் தலைவர்)

க. இரத்தினம் 
(கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்)

மா. பரமானந்தம் 
(முகாமையாளர், யாழ்ப்பாணம் தேசிய சேமிப்பு வங்கி- மேற்தரக்கிளை)







ஆ. மகேந்திரம் 



கௌரவிக்கப்பட்ட மூத்த உறுப்பினர்கள்


பரிசில் வழங்கும் நிகழ்வு







பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

Sunday, October 2, 2011

அறிவோர் ஒன்றுகூடல் –பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப் பகிர்வு




 பருத்தித்துறை அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு 02.10.2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. தொடக்கவுரையை து.குலசிங்கம் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமிழ்நாட்டுப் பயணத்தின்போது ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து “பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப் பகிர்வு” இடம்பெற்றது. உரைகளை து. குலசிங்கம், குப்பிழான் ஐ. சண்முகன், ஆங்கில ஆசான் கந்தையா, சு.குணேஸ்வரன், வேல் நந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

உரைகளில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மனிதநேயம், விமர்சனப்பங்களிப்பு, தமிழாய்வுப்பணி, பல்கலைக்கழகப்பணி, அவர் சந்தித்த எதிர்வினைகள் ;ஆகிய பல விடயங்கள் உரையாளர்களால் எடுத்துக் கூறப்பட்டன.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் விருது பெறும் குப்பிழான் ஐ. சண்முகனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதோடு வாழ்த்துக் கவிதையை கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் அவர்கள் சமர்ப்பித்தார்.

இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அறிவோர் கூடல் நண்பர்கள் குழாத்தைச் சேர்ந்த ஆசிரியர் இரத்தினசோதி அவர்கள் தனது மகளின் திருமண நிகழ்வின்பொருட்டு இராப்போசனம் வழங்கி தனது நட்பைத் தெரிவித்தார். கவிஞர் கே.ஆர் திருத்துவராஜா அவர்கள் நன்றியுரை கூறினார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்












பதிவு - சு.குணேஸ்வரன்
படங்கள் - சுதர்சன்,குணேஸ்வரன்

Monday, September 5, 2011

வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை நூல் வெளியீடு




செந்திவேல் அவர்கள் உரை - காணொளி 1


செந்திவேல் அவர்கள் உரை - காணொளி 2


“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் தலைமை வகித்தார்.

நிகழ்வில் சி.க செந்திவேல் அவர்களுக்கு நூலின் முதற்பிரதியை கிருஷ்ணபிள்ளையின் மகன் கி. நவநீதன் வழங்கினார்.

இந்நூலில் வே.சிவயோகன், சி.காசெந்திவேல், ,சி.வன்னியகுலம், க.தங்கவடிவேல், செ.திருநாவுக்கரசு, கி.கணேசன், நந்தினிசேவியர்,  எம்.கே சிவாஜிலிங்கம், வையாபுரி,  தெணியான்,  திருமதி பிறேமா மதுரநாயகம், வ.சின்னத்தம்பி, தணிகையன்,  குணசிங்கம் மற்றும் சீனியர் குணநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் ,குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றோடு நூலின் இறுதியில் மறைந்த கிருஷ்ணபிள்ளை அவர்கள் எழுதிய சில கவிதைகளும் எழுத்தாளர் டானியல் மறைவின்போது எழுதிய கட்டுரை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம், மூத்த எழுத்தாளர் தெணியான், ஆசிரியர் சு. குணேஸ்வரன், ஓய்வுபெற்ற கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி த. தவேந்திரராஜா, கவிஞர் சின்னராஜன், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.நன்றியுரையை கிருஷ்ணபிள்ளை நவநீதன் தெரிவித்தார்.

கிருஷ்ணபிள்ளை அவர்களின் மறைவின்போதான எனது முன்னைய இணைப்பு

நிகழ்வில் இருந்து சில படங்கள்



செ.சதானந்தன்

நூலின் முதற்பிரதிகை சி. கா செந்திவேல் அவர்களுக்கு 
கி.நவநீதன் வழங்குகிறார்.

திருமதி பத்மா மதுரநாயகம் 

த.தவேந்திரராஜா

க. சின்னராஜன்

மூத்த எழுத்தாளர் தெணியான்

சி. கா செந்திவேல்



நூலின் பின்னட்டை


நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 




பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்