"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Wednesday, March 9, 2011

அறிவோர் கூடல் - வாழ்வக இயக்குநருடான கலந்துரையாடல்


பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்


இம்மாத அறிவோர் கூடல் கடந்த 06.03.2011 அன்று பருத்தித்துறையில் இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை து.குலசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அதன்போது கிரியா ராமகிருஸ்ணன் மிகப்பெறுமதியான 'பிறெய்லி அகராதி' யின் ஏழு பாகங்களை வாழ்வகத்திற்கு கொடுக்க முன்வந்துள்ளமையை விதந்து குறிப்பிட்டார். மிகப்பெறுமதியான வேலை. தேவைப்படும் இடத்திற்கு அதுபோய்ச் சேருவது எமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வாழ்வகம் ரவீந்திரன் பற்றிய அறிமுகத்தினை எழுத்தாளர் இராகவன் நிகழ்த்தினார். தொடர்ந்து இரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். உரையின் முக்கிய பகுதிகளை பா.துவாரகன் வழிநடத்தி முக்கிய விடயங்களை பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.

இரவீந்திரன் அவர்கள் பேசும் போது தமது கல்விநிலை> தொழில்>வாழ்வகத்துடன் தனக்கிருந்த தொடர்பு>வாழ்வகத்தின் ஸ்தாபகர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் பணிகள்> வாழ்வத்தில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்> சமூகத் தொடர்பு ஆகியன பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் உரையாற்றினார்.

உரையின் இடையில் வாழ்வகச் செயற்பாடுகளின் நிகழ்வுகளில் இருந்து ஒரு பகுதி ஒளிநாடா காண்பிக்கப்பட்டது.

நிகழ்வின் தொடர்ச்சியாக கலந்துரையாடலும்> அறிவோர் கூடல் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பொருட்டும் உரையாடல்களை முன்வைப்பதன் பொருட்டும் 'செய்திமடல்' ஒன்று வெளிவரவுள்ள தகவலும் பரிமாறப்பட்டது.

பேச்சாளருக்கு யோசப் பாலா அவர்கள் மரியாதையின் பொருட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இரவீந்திரன் அவர்களும் வாழ்வக ஸ்தாபகரின் குறிப்புக்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் மற்றும் அவர் ஞாபகமாக வெளியிடப்பட்ட மலரின் பிரதிகளையும் வந்திருந்தோருக்கு ஞாபகமாகக் கொடுத்தார். நன்றியுரையை ஆங்கில ஆசான் கந்தையா அவர்கள் நிகழ்த்தினார்.

மிக ஆரோக்கியமான ஒன்றுகூடலாக அமைந்திருந்த மேற்படி நிகழ்வு. வித்தியாசமான அனுபவங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.

நிகழ்வின் படங்கள் சில















No comments:

Post a Comment