"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, June 12, 2011

அகில இலங்கை கலை இலக்கியப் பெருவிழா


பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தின் கலை இலக்கியப் பெருவிழா 12.06.2011 ஞாயிறு காலை துன்னாலை வடிவேலர் மணிமண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பொன் சுகந்தன் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், விகடகவி திருநாவுக்கரசு ஆகியோர் உரைநிகழ்த்தினர். உரைகள் யாவும் பண்பாட்டுப் பேணுகையையும் அதனைச் சீர்குலைக்கின்ற தொலைக்காட்சி உட்பட்ட சமூக பொருளாதார அம்சங்களையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தன.

இந்நிகழ்வில் கலை இலக்கியப் பணிக்காகச் சிறப்பாகச் சேவையாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்திற்கு 2010 ற்கான விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. விருதினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களிடமிருந்து திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞர் ஜி.பி.பேர்மினஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். விருது ஏற்புரையையும் நன்றியையும் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் ஜோன்சன் ராஜ்குமார் நிகழ்த்தினார்.


“ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு” என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.No comments:

Post a Comment