"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Monday, August 22, 2011

மீண்டு வந்த நாட்கள் - அறிமுகவிழாவதிரி சி. ரவீந்திரனின் 'மீண்டு வந்த நாட்கள்' கவிதைத் தொகுதி அறிமுகவிழா 21.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வில் வரவேற்புரை செ. கணேசன், நூல் அறிமுகம் திருமதி எஸ் தேவகௌரி, வாழ்த்துரைகள் பேராசிரியர் சபா ஜெயராசா ,டொமினிக் ஜீவா மற்றும் தி. ஞானசேகரன், கருத்துரை பேராசிரியர் செ.யோகராசா, நயவுரை சிறீஸ்காந்தராசா, தொகுப்புரை மேமன்கவி ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
படங்கள் - வதிரி சி. ரவீந்திரனின் முகநூலில் இருந்து


1 comment: