"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, May 11, 2013

பிரெயில் நூல்கள் வாழ்வகத்திற்கு அன்பளிப்புகிரியா நிறுவனம் பார்வையற்றோருக்காக பிரெயில் அகராதியை முன்னர் வெளியிட்டிருந்தது. அவற்றின் ஒரு தொகுதி அகராதிகளை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் கிரியா ராமகிருஷ்ணன் அவர்கள் அன்பளிப்பாக கடந்த வருடம் சுன்னாகத்தில் இயங்கும் வாழ்வகம் இல்லத்திற்கு வழங்கியிருந்தார். (தொடர்புடைய இடுகை :வாழ்வகத்திற்கு பிறெயில் அகராதி கையளிப்பு நிகழ்வு)

கிரியாவின் தொடர் பதிப்பு முயற்சிகளில் இப்போது இரண்டு நூல்கள் தருவிக்கப்பட்டுள்ளன. நன்னூலுக்கு கூழங்கைத் தம்பிரான் எழுதிய உரையுடன் கூடிய நான்கு தொகுதி பிரெயில் நூல்களையும், குட்டி இளவரசன் என்ற பிரபலமான மொழிபெயர்ப்பு நாவலின் பிரெயில் நூலையும் து. குலசிங்கம் அவர்கள் வாழ்வகத்திற்கு அன்பளிப்பாக வழங்குகிறார். 

இந்த நல்ல முயற்சி தொடரவேண்டும். கிரியா தொடர்ந்தும் இதுபோன்ற நூல் முயற்சிகள் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் பார்வையற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக தொடர்ந்தும் அவற்றைப் பெற்று, வாழ்வகத்திற்கு வழங்க சமூகத்தின் மீது அக்கறை கொண்டோரும் பொருள்வளம் மிகுந்தோரும் உதவவேண்டும். 

இந்த ஐந்து பிரெயில் நூல்களையும் தருவித்து வாழ்வகம் இல்லத்திற்கு  அன்பளிப்பாக வழங்கும் அன்புக்குரிய து.குலசிங்கம் அண்ணா அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.  
 - சு. குணேஸ்வரன் 
குட்டி இளவரசன் : தமிழ்மொழிபெயர்ப்பு நூலும் பிரெயில் நூலும்


நன்னூலுக்கு கூழங்கைத் தம்பிரான் எழுதிய உரையுடன் கூடிய 
பிரெயில் நூல். (நான்கு தொகுதி)

No comments:

Post a Comment