"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Friday, October 17, 2014

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு   தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 16.10.2014 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வாசிப்பு மாத நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

   ஆசிரியர் ஆ. வினோதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் திருமதி கௌரி சேதுராஜா அவர்கள் வாழ்த்துரையை நிகழ்த்தினார். நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞருமாகிய த. ஜெயசீலன் அவர்கள் “மாணவர்களிடையே வாசிப்பின் அவசியம்” என்பது பற்றி உரை நிகழ்த்தினார். அன்றையதினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் மிக ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(படங்கள்: ஆ.வினோதன், பதிவு: சு.குணேஸ்வரன்)No comments:

Post a Comment