"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, January 18, 2015

கலாபூஷணம் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கத்தின் "நீயின்றி எமக்கேது வாழ்வு" நூல் வெளியீடு



கலாபூஷணம் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கத்தின் "நீயின்றி எமக்கேது வாழ்வு"என்ற நூல் வெளியீடு 18.01.2015 ஞாயிறு காலை பூவற்கரை ஆலய ரவிச்சந்திர சர்மா மண்டபத்தில் கிராமஅலுவலர் தி. வரதராசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு முதன்மைவிருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் திரு சி. சத்தியசீலன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த ஜெயசீலன் கலந்து கொண்டார்.
நூல் அறிமுகவுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுரை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணனும், வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை விரிவுரையாளர் தி. விக்னேஸ்வரனும், நயப்புரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர்.
ஆசியுரைகளை சிவசிறீ வை. இராஜேஸ்வரக்குருக்கள், சி. க லோகநாதன் ஆகியோரும், வரவேற்புரையை செ. கணேசனும், வாழ்த்துரையை வல்வெட்டித்துறை தபால் அதிபர் அ. அருளானந்தசோதியும் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை முதன்மை விருந்தினர் அவர்களிடமிருந்து திருமதி அன்னலட்சுமி சத்தியநாதனும் சிறப்புப் பிரதியை ஆசிரியர் திருமதி யசோதா கிருஷ்ணராஜனும்  பெற்றுக்கொண்டனர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.
(பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்)
















   

No comments:

Post a Comment