நிகழ்ச்சிநிரலை பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.
26.06.2015 முதலாம் நாள் ஆய்வரங்கு நிகழ்வு - ஒளிப்படங்கள் சில.
முதலாம் நாள் நிகழ்வுகள் - நிகழ்ச்சி நிரல்
திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
ஆய்வரங்கு
நாவல் அரங்கு
26.06.2015 வெள்ளிக்கிழமை, காலை 8.45- 12.30
26.06.2015 வெள்ளிக்கிழமை, காலை 8.45- 12.30
தலைமை: பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
1. ‘எடுத்துரைப்பியல் நோக்கில் ஈழத்து தமிழ் நாவல்கள்’ - பேராசிரியர் செ.யோகராசா
2. ‘ஈழத்து நாவல்களில் சமூக மாற்றம்’ - திரு.ஈ.குமரன்
3. ‘புலம்பெயர் நாவல்களின் நுண் அரசியலும், புதிய சாத்தியப்பாடுகளும் - திரு.சு.குணேஸ்வரன்
4. ‘படைப்பு மனமும் அனுபவ வெளிப்பாடும்’ - திரு.ச.ஆ.உதயன்
அரங்கு : பண்பாடு, ஊடகம், இணையம்
26.06.2015 வெள்ளிக்கிழமை 1.45 - 4.30
தலைமை : திரு.ம.நிலாந்தன்
1. ‘அறிவுருவாக்கப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ் இணையம்’ - திரு.கெ.சர்வேஸ்வரன்
2. ‘ஈழத்து அச்சு ஊடக வெளியில் சமகாலத் தமிழ் இலக்கியம் - திரு.கருணாகரன்
3. ‘சமகால ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் காண்பியக் கலைகள் - திருமதி. பப்சி மரியதாசன்
4. ‘ஈழத்தில் தமிழ்த் திரைப்பட இரசனை’ திரு.ச.இராகவன்
• கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இல. 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளன.
பிரதம விருந்தினர் :
திரு த. குருகுலராஜா,
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், வடக்கு மாகாணம்.
திரு த. குருகுலராஜா,
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், வடக்கு மாகாணம்.
சிறப்புரை :
திரு ச. லலீசன்,
உப அதிபர்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
திரு ச. லலீசன்,
உப அதிபர்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
கலை நிகழ்வுகளாக திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி. அகல்யா ராஜபாரதியின் மாணவிகள் வழங்கும் நடனங்களும், செல்வி எஸ்.பிரபாலினி குழுவினர் வழங்கும் இசைக் கச்சேரியும் , திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘மன விகாரம்’ நவீன நாடகமும் இடம்பெறும்
கீழே வரும் ஒளிப்படங்களுக்கு நன்றி : திரு ச. லலீசன்
செல்வி எஸ்.பிரபாலினி குழுவினர் வழங்கும் இசைக் கச்சேரி
நன்றி: http://www.nanilam.com/
- பெஸ்ரியன்
திருமறைக் கலாமன்றத்தின் தமிழ் விழா இன்று 26.06.2015 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பகல் நிகழ்வுகளாக ஆய்வரங்குகள் 1.45 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையும் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
இரண்டாவது அமர்வு பண்பாடு, ஊடகம், இணையம் தொடர்பான ம.நிலாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆய்வுரைகளை ‘அறிவுருவாக்கப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ் இணையம்’ என்னும் தலைப்பில் கெ.சர்வேஸ்வரனும், ‘ஈழத்து அச்சு ஊடக வெளியில் சமகாலத் தமிழ் இலக்கியம்’ என்னும் தலைப்பில் கருணாகரனும், ‘சமகால ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் காண்பியக்கலை கள்’ என்னும் தலைப்பில் திருமதி.பப்சி மரியதாசனும், ‘ஈழத்தில் தமிழ்த் திரைப்பட இரசனை’ என்னும் தலைப்பில் ச.இராகவனும் சமர்பித்தனா்.
தலைமையுரையாற்றிய அரசியல் ஆய்வாளா் நிலாந்தன்,
ஈழத்து கலை இலக்கிய கருத்துவருவாக்கம் கடந்த நான்கு சகாப்தங்களில் ஒப்பீட்டளவில் மாறியிருக்கிறது. சமகால ஈழத்து கலை இலக்கிய போக்கு 2009, மேக்குப் பிறகானது என்று நான் நினைக்கின்றேன். 2009 மேக்குப் பின்னர் ஊடகம், சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் பொருளாதாரம் எல்லாம் குலைக்கப்பட்டு உள்ளது. 30 வருட ஆயுதப் போராட்டம் எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது. வழிபாடுகளுக்குரியவற்றை மாற்றியமைத்து உள்ளது. புதிதுபுதிதாக வேலிகள் கட்டியெழுப்பப்பட்டது. 2009 மே வரை புதிதாக கட்டியெழுப்பப்பட்ட அரசு மீண்டும் குலைக்கப்பட்டது. குலைக்கப்பட்டதை பேணவே எதிர்தரப்பு விரும்புகிறது. புதிதாக கட்டமைக்க வேண்டிய மிதவாத அரசியல்வாதிகள் அதைச் செய்ய விரும்பவில்லை.
ஒரு நீண்ட வீர யுகம் முடிவுக்கு வந்துவிட்டது. அவை மம்மியாக்கப்பட முடியாது. அவற்றை போஸ்மாட்டம் செய்ய வேண்டும். அப்படி செய்ய விரும்பாதவர்கள் தொடர்ந்தும் இறந்த காலத்தில் வாழ விரும்புகிறார்கள். இது ஒரு இடைமாறும் காலகட்டம். ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் இதை இடைமாறும் காலகட்டமாக பார்த்தார்களேயானால் ஈழத்தமிழர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி போக முடியும். இதை மூடி மறைத்தாலும் பண்பாடு அதனை வெளிக்காட்டும். குலைக்கப்பட்டதை கட்டியெழுப்ப எம்மிடையே உள்ளவர்களிடம் ஒழுக்கமும் தரிசனமும் இல்லை.
சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் படைப்பாளிகள் வேண்டும். பழியைத் தூக்கி இளைய சமூகத்தினரிடம் போடப் பார்க்கிறோம். இது ஒரு கூட்டுப்பழி. மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையேயான இடைவெளி பிரதிபலிக்கிறது. ஏன் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பது பற்றிய ஆய்வு யாராலும் மேற்கொள்ளவில்லை. மிக அரிதாகவே அவை நடைபெறுகிறது.
இன்று நம்மிடையே தொழில்நுற்பமும் பண்பாடும் மோதத்தொடங்கி விட்டது. பிள்ளைகளை இணையத்தில் எதையுமே பார்க்க வேண்டாம் என கட்டுப்படுத்த முடியாது. பார்த்துக் கட என்றுதான் சொல்ல முடியம். அவர்கள் பார்ப்பதை தடுக்க முடியாது. அப்படியானால் cultural war ஒன்றை உருவாக்க வேண்டும். முடியுமா? 2009 மேக்குப் பின்னர் தமிழ் மக்கள் அனைத்துலக திறந்தவிடப்பட்ட நிதிமூலதனச் சந்தையினுள் நிபந்தனையின்றி இணைக்கப்பட்டுள்ளார்கள்.
தொழில்நுற்பமும் பண்பாடும் மோதுமிடத்தில் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும், ஊடகங்களாலும் என்ன செய்து விட முடியும்? அரசியல்ரீதியாக தலைமை தாங்குபவர்கள் தான் தீர்க்க தரிசனமான முடி வெடுக்க வேண்டும். ஊடகங்களும், படைப்பாளிகளும் முடிவெடுக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். அப்படி ஆற்றுப்படுத்தும் போதுதான் இடைமாறும் நிலையிலிருக்கும் தமிழ் சமூகம் புதிய யுகத்தை அடைகாக்கும் புதிய சமூகமாக வீறுகொண்டு எழும் என்றாா்.
No comments:
Post a Comment