"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, October 3, 2015

ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு




    ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” என்ற சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 03.10.2015 மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் இடம்பெற்றது. டாக்டர் எம்.கே முருகானந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அறிமுகவுரையை குப்பிழான் ஐ. சண்முகன் நிகழ்த்தினார். நூல் நயப்புரைகளை க.கதிரமலை, த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களிடமிருந்து வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வு வேலாயுதம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.




ராஜாஜி ராஜகோபாலனுடன் பிரபா, மயூரரூபன், 
அஜந்தகுமார், குணேஸ்வரன்ஆகியோர்.  



1 comment:

  1. எனது அயல்வீட்டுத் துவாகரனைக் காணவும் பேசவும் ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. அது பருத்தித்துறையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டு விழாவின்போது. வாக்குறுதி கொடுத்ததுபோல் வந்துவிட்டார். அதுமட்டுமா விழாவில் சுட்ட படங்களையும் எடுத்து ஒரு அழகான, சிறிதாக இருந்தாலும் சிக்கனமாக இல்லாத பதிவொன்றையும் தனது வலைப்பூவில் பதிந்திருக்கிறார்.

    எப்படி நன்றி சொல்வேன், நண்பனே?

    குதிரை இல்லாத ராஜகுமாரன் எனது வாசகர்களைக் காண வந்துகொண்டிருக்கிறானென என அறிந்தேன். உங்கள் ஒவ்வொருவரின் ரசனைக்கு விருந்தளிக்க ஒரு கதையாவது அங்கே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறேன். நம்பாவிடில் துவாகரனிடம் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். நன்றி

    ராஜாஜி

    ReplyDelete