'இலக்கியவெளி' அரையாண்டு இதழ்களின் அறிமுகமும் உரையாடலும் 28.05.2023 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன நூலக குவிமாடத்தில் மூத்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் இலக்கிய வெளியின் மூன்று இதழ்கள் பற்றிய உரையாடலும் ஏனைய இரண்டு இதழ்களின் அறிமுகமும் இடம்பெற்றது. வடகோவை வரதராசன், தி. ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் குறித்துப் பேசினார். ந. குகபரனும் வேல் நந்தகுமாரும் கவிதைச் சிறப்பிதழ் குறித்துப் பேசினர். இ. இராஜேஸ்கண்ணன் சிறுகதைச் சிறப்பிதழ் குறித்துப் பேசினார். மூன்று இதழ்கள் பற்றிய வாசக அனுபவத்தை சின்னராஜா விமலன் முன்வைத்தார். இலக்கிய வெளியின் 4ஆவது இதழ் க. பஞ்சாங்கம் சிறப்பிதழாக வெளிவந்தது. இது தமிழகத்தில் கடந்த மாதம் வெளியிடப்பெற்றது.
5ஆவது இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தும் முகமாக இலக்கியவெளி ஆசிரியர் அகில் சாம்பசிவம் வழங்கி வைக்க மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா பெற்றுக் கொண்டார். ஏற்புரையையும் நன்றியுரையையும் அகில் சாம்பசிவம் நிகழ்த்தினார்.
'இலக்கியவெளி' ஈழம், தமிழகம், புகலிடம் சார்ந்த படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்முரசு 04.06.2023
No comments:
Post a Comment