"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Wednesday, October 20, 2010

பாட்டிமார் கதைகள் - நூல் வெளியீடு
பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்

கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு ‘இராசமணி இல்லம்’ என்னும் முகவரியில் 20.10.2010 புதன்கிழமை ‘பாட்டிமார் கதைகள்’ (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்) என்ற நூல் வெளியீடு இடம்பெற்றது. அண்மையில் மறைந்த திருமதி சின்னத்தம்பி இராசமணி அவர்களின் நினைவாக அன்னாரது குடும்பத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டது. இதனை சு. குணேஸ்வரன் தொகுத்திருந்தார்.


பேராசிரியர் கி. விசாகரூபனின் ‘ஈழத்துத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள்’ என்ற நூலில் இருந்தும் கி. ராஜநாராயணனை தலைமைத் தொகுப்பாளராகக் கொண்டும் வெளிவந்த ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற நூலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நாட்டுப்புறக் கதைகளைத் கொண்ட தொகுப்பாக அந்நூல் அமைந்திருந்தது.

மேற்படி நிகழ்வு முன்னாள் சீமெந்துக் கூட்டுத்தாபன சிறாப்பர் திரு பு. நாகமுத்து அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் நூல் பற்றிய உரையினை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.

நூலின் முதல் இரண்டு பிரதிகளையும் அன்னாரின் குடும்பவழி உரித்தானவர்களில் திரு நடேசன் அருமைராசா, கிட்டிணன் அருமைத்துரை ஆகிய இருவருக்கும் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார். நூலின் இன்னொரு பிரதியை இலக்கிய வாசகர்களில் ஒருவராகிய திரு செல்லக்குட்டி கணேசன் அவர்களுக்கு அன்னாரின் மருமகன் கிராம அலுவலர் பு. சாந்தரூபன் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.

நிகழ்வில் நூலின் தொகுப்பாளராகிய சு. குணேஸ்வரன் ஏற்புரையையும், செல்வன் சாந்தரூபன் சாருகாந் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.

சிறுவர்களிடத்தில் வாசிப்பு மட்டம் அருகி வருகின்ற இக்காலத்தில் வாசிப்பைப் பரவலாக்கும் நோக்குடன் இத்தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் மறைந்த ஒருவரை காலந்தோறும் நினைந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் இவ்வாறான வெளியீட்டு முயற்சி அமைந்திருந்தது. இலவசமாகவே விநியோகிக்கப்பட்ட நூற்பிரதிகளில் ஒரு தொகுதியை பாடசாலை நூலகங்களுக்கும் பொதுநூலகங்களுக்கும் வழங்குவதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாட்டிமார் கதைகளின் பிரதிகள் தேவைப்படுவோர் பின்வரும் முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புக்கு :-
சாந்தரூபன் ஞானகலை,
அண்ணா சனசமூக நிலையம்,
கெருடாவில் தெற்கு
தொண்டைமானாறு,
மின்னஞ்சல் :- rubanmalar@ymail.கம

நிகழ்வின் ஒளிப்படங்கள்
3 comments:

 1. பேஸ்புக்' இல் எழுதிய நண்பர்கள்
  #
  Thevarasa Mukunthan, மன்னார் அமுதன், Munchuthan Kunasingam and 8 others like this.
  #

  *
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan பயனுள்ள நல்ல முயற்சி. வாழ்த்துக்க்ள்.
  23 hours ago · LikeUnlike
  *
  தீபச்செல்வன் பிரதீபன் வாழ்த்துக்கள் துவாரகன். மிகவும் நல்ல பணி. தொடர்ந்தும் இப்படியான பணிகளை ஆற்றுங்கள்
  23 hours ago · LikeUnlike
  *
  Yogarajah Nimalraj keep it up anna

  ReplyDelete
 2. இன்னும் இவர்கள் பேஸ்புக்கில் சொன்னது..

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan வாய்ப் பேச்சில் வீரராக இருந்து கொண்டு பழம் பெருமை பேசுவோர் அனேகம். ஆனால் செயலில் காட்டியுள்ள சு. குணேஸ்வரன் பாராட்டப்பட வேண்டியராவார். அவர் தொகுத்த நாட்டார் கதைகள் தொகுப்பு இது.

  • பொன்னர் அம்பலத்தார், Ajanthakumar Tharumarasa and 2 others like this.
  • •

  Ajanthakumar Tharumarasa குணேஸ்வரன் அண்ணாவின் முயற்சிகள் இன்னும் இன்னும் தொடரட்டும்... அவருக்கு என் வாழத்துக்கள்
  23 hours ago • LikeUnlike • 1 person

  ReplyDelete