"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, September 8, 2013

நவாலியூரான் நா . செல்லத்துரையின் ‘வீசிய புயல்’ நாவல் வெளியீட்டுவிழா





நவாலியூரான் நா. செல்லத்துரை எழுதிய ‘வீசிய புயல்’ என்ற நாவலின் வெளியீட்டு நிகழ்வு 08.09.2013 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் க. மூ. சின்னத்தம்பி அரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு கொற்றாவத்தை அ.மி.த. க. பாடசாலை அதிபர் ச.செல்வானந்தன்  தலைமை வகித்தார். முன்னதாக தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவிகளின் இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்துடன் இடம்பெற்ற நிகழ்வில், ஆசியுரையை S.W அருட்திரு தேவகுமார் நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகளை சி. க. லோகநாதன், கி. கணேசன், கலாபூஷணம் மா.அனந்தராசன், கொற்றை பி. கிருஸ்ணானந்தன், ஆகியோரும்;  நூல் வெளியீட்டுரையை சி. வன்னிகுலமும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ஐ. விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார்,

நூல் மதிப்பீட்டுரையை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் நா. செல்லத்துரை அவர்களும் நன்றியுரையை செ. சதானந்தனும் நிகழ்த்தினர். மேற்படி நிகழ்வு வடமராட்சி நவாலியூரான் நட்பு வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அண்மையில் மறைந்த வி.பி தனேந்திராவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நவாலியூரானின் ‘வீசிய புயல்’ நாவல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்

































 

1 comment: