துவாரகன்
(முகநூல் குறிப்பு)
தொண்டைமானாறு சந்நிதி கோவிலின் தெற்கு எல்லையில் தொண்டைமானாறு கடனீரேரியின் கிழக்கில் அமைந்துள்ளது கரும்பாவாளி என்ற குக்கிராமம்.
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரும்பாவாளி என்றால் அங்கே ஒரு சுடலை (மயானம்) இருக்கிறது என்பது மட்டும்தான்.
அங்கு 2012 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்துக்குரிய கேணி, ஆவுரஞ்சிக்கல், சிறுகிணறு என்பன பேராசிரியர். புஷ்பரட்ணம் அவர்களாலும் அவரின் மாணாக்கரினாலும் கண்டுபிடிக்கப்பட்டு மரபுரிமைச்சின்னங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டன.
இது தொடர்பான ஆவணப்படம் ஒன்று சனிக்கிழமை (04.08.2018) யாழ் நூலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஆனால் வல்வை நகராட்சி மன்றம் குறித்த கேணிக்கு அருகில் (300 மீற்றர் ) குப்பைமேடு ஒன்றைக் கொட்டி வளர்த்து வருகிறது. இது தொடர்பாக தொண்டைமானாறு பிரதேச வாசிகள் உரியவர்களிடம் முறையிட்டும் உள்ளனர்.
இந்த இடத்தில் குப்பைமேட்டை வளர்ப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் எவையாக இருக்கும்
1. கரும்பாவாளி கேணி என்ற பாரம்பரிய மரபுரிமைச் சின்னம் அழிவடையலாம்.
2. அருகில் அமைந்துள்ள நன்னீரேரி கூவம் ஏரியாகலாம்.
3.அருகிலேயே இயற்கையாக அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் அழிக்கப்படலாம்.
4. குறித்த பிரதேசத்தின் வடக்கு, கிழக்குப் புறத்தில் வாழ்கின்ற மக்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
5.இலட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் செல்வச்சந்நிதி புனித வழிபாட்டுப் பிரதேசம் பாதிக்கப்படலாம்.
6. மக்களின் விவசாய நிலங்கள் நீர்நிலைகள் பாதிக்கப்படலாம்.
வல்வை நகராட்சி மன்றம் ஒருபுறத்தை அழகாகவும் உல்லாச மையங்களாகவும் மாற்றிக்கொண்டு தொண்டைமானாற்றை குப்பைமேடாகவும் மாற்றுவதற்குரிய அனுமதியை யார்தான் கொடுத்தார்களோ?
இன்னமும் இதை யாரிடம் சொல்லி அழுவது???
No comments:
Post a Comment