"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, December 22, 2013

மனோகரியின் “மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்” கவிதைநூல் வெளியீடு




தி. செல்வமனோகரனின் ஏற்பாட்டில் 16.12.2013 திங்கள் காலை திருநெல்வேலியில் மனோகரியின் “மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்” கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

கவிஞர் சோ. பத்மநாதன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். நூல் பற்றிய உரைகளை தானாவிஷ்ணு, சி. ரமேஷ் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் மனோகரியும் நன்றியுரையை தி. செல்வமனோகரனும் நிகழ்த்தினர்.

நூலுக்கு முன்னுரையை கவிஞர் சோ. பத்மநாதனும், ‘ஒன்றுபோலவே இருக்கும் வெவ்வேறு நதிகள்’ என்ற பிற்குறிப்பை கவிஞர் அனாரும் எழுதியிருக்கின்றனர்.

தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
‘இடைவெளிகள்’
- மனோகரி
நதி
மலைவிட்டிறங்கித்
தனித்துப் போனது

சோர்வுகளும்…
தூரப்பார்வைகளும் மட்டுமே துணையாய்
எதிரொலிக்க யாருமின்றி
பிரிந்து போனது…!

குரலில் ஒலித்த
உண்மைகளின் அர்த்தம் புரியாது
‘மரபுகளில்’ மயங்கிப்போன
மலையைவிட்டு நழுவிப்போனது

மலைக்கு
தழுவும் முகில்களின் துணை உண்டே?
ஆனால் மேகங்கள் நிலையற்றவை.

No comments:

Post a Comment