"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, December 22, 2013

இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாகரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2013 ஞாயிறு காலை செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச சிவசிறீ தலைமையில் இடம்பெற்றது.

வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் அ. சிவஞானசீலன் நிகழ்த்தினார். ந.மயூரூபனின் சொற்குவியம் த. அஜந்தகுமாரின் படைப்பின் கதவுகள் என்ற இரண்டு நூல்களுக்குமான வெளியீட்டுரையை வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளர் திரு சி. சத்தியசீலன் நிகழ்த்தினார்.
அறிமு உரைகளை கை. சரவணன், சி. திருச்செந்தூரன் ஆகியோரும் மதிப்பீட்டுரைகளை தி. செல்வமனோகரன், இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

ஏற்புரைகளை நூலாசிரியர்களும் நன்றியுரையை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. ரூபகுமாரும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் : நன்றி - யாத்திரிகன்.

ஒளிப்படங்கள் : நன்றி - யாத்திரிகன்.

No comments:

Post a Comment