"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, June 5, 2012

கொழும்பில் நடைபெற்ற உலகத்தமிழ் இலக்கிய மாநாடு - சில படங்கள்
கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஜீன் 2,3,4 ஆந்திகதிகளில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் "தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும்" என்ற பொருளிலான உலகத்தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. அதிகமும் இலங்கையிருந்தே ஆய்வாளர்களும் பேராளர்களும் கலந்து கொண்டனர்.


குறைகளும் நிறைகளும் ஆதரவும் எதிர்ப்பும் எந்த நிகழ்வுக்குத்தான் இல்லை. இம்முறை அதிகமும் இளையபடைப்பாளிகளும் இளைய ஆய்வாளர்களும் பங்குகொண்டு காத்திரமான கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

(3 நாட்களும் எனது கமராவில் சிக்கிய காட்சிகளில் இருந்து சில படங்களைத் தருகிறேன். சு. குணேஸ்வரன்)

படங்கள் : குணேஸ்வரனும் நண்பர்களும்