"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, August 6, 2023

50 ஆவது இலக்கியச் சந்திப்பு - அனலைதீவு


 50ஆவது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணம் அனலைதீவில் இரண்டு நாட்கள் இடம்பெற்றன. யூலை 29,30 ஆந் திகதி அனலைதீவு ஐயனார் ஆலய வளாகத்தின் அனலை ஐயனார் அன்னதான மண்டபத்தில் அப்பிரதேச மக்களின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. 

இரண்டு நாள் நிகழ்வுகளிலும் உரைகள், கருத்துரைகள், நாடகம் என்பன இடம்பெற்றன. நூல்கள் சஞ்சிகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அனலை மக்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றது மனநிறைவைத் தந்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருவது அவசியமாகும். 

நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள் : 

(படங்கள் : குணேஸ்வரன் மற்றும் நண்பர்கள் )