"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, July 7, 2020

ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 'சந்திரகாவியம்' நூல் வெளியீடும்அமரர் க.வ சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 'சந்திரகாவியம்' நூல் வெளியீடும் அண்மையில் இடம்பெற்றது.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக நிறுவுநர் க. வ. சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 05.07.2020 பகல் அன்னாரின் உடுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுகளின் ஆவணப் பதிவாகிய ' சந்திரகாவியம்' என்னும் நூலும் வெளியிடப்பட்டது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம். நூலில் இடம்பெற்றுள்ள நினைவுக்குறிப்புக்களை கீழ்க்காணும் இணைப்பில் வாசிக்கமுடியும்.
https://chandrakaaviyam.blogspot.com/p/blog-page.html
(படங்கள் : சஜிஷ்ணவன், லக்சி, குணேஸ்)