அலைவும் உலைவும் - நூல் வெளியீடு
சு. குணேஸ்வரனின் ‘அலைவும் உலைவும்’ என்ற புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த 18.10.2009 ஞாயிறு, காலை 9.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரி திறந்தவெளி அரங்கில் பருத்தித்துறை ப.நோ.கூ. சங்க வர்த்தக முகாமையாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு வே. பரமானந்தம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது, குணேஸ்வரனின் பெற்றோர் திரு திருமதி சுப்பிரமணியம் கமலாதேவி மற்றும் வடமராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) திருமதி சுதாமதி நந்தபாலன், யா/தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் திரு எம். நவநீதமணி, எழுத்தாளர் ஆர். இரத்தினசேகரன், சமூக முன்னோடி திரு மு. இரத்தினம் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாவினை தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவிகள் இசைத்தனர். வரவேற்புரையினை யா/அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆசிரியர் திரு சு. மகாதேவா அவர்கள் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் மற்றும் இலக்கியச்சோலை து. குலசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
நூலின் முதற்பிரதியை யா/அம்பன் அ.மி.த.க பாடசாலை அதிபர் திரு. பொ. சிவராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையினை நெல்லியடி ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு சு. ஞானேஸ்வரன் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் திரு சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.
நிகழ்வின் பதிவுகள்
மங்கல விளக்கேற்றும் விருந்தினர்கள்
தமிழ்த்தாய் இசைக்கும் மாணவிகள் மற்றும் தலைமையுரை நிகழ்த்தும் வே. பரமானந்தம், வரவேற்புரை நிகழ்த்தும் சு.மகாதேவா, நன்றியுரை நிகழ்த்தும் சு.ஞானேஸ்வரன்
வாழ்த்துரைகளை நிகழ்த்தும் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் அவர்களும் இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களும்.
வெளியீட்டுரை நிகழ்த்தும் கலாநிதி த. கலாமணி அவர்கள்
நூலின் முதற்பிரதியை கலாநிதி த. கலாமணி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அதிபர் பொ. சிவராசா. நடுவில் நூலாசிரியர் சு. குணேஸ்வரன்
மதிப்பீட்டுரை நிகழ்த்தும் இரா. இராஜேஸ்கண்ணன் மற்றும் த. அஜந்தகுமார்
ஏற்புரை நிகழ்த்தும் நூலாசிரியர் சு. குணேஸ்வரன்
நிகழ்வில் கலந்து கொண்டோர்
Comments
Post a Comment