புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை

பதிவு:- சு. குணேஸ்வரன்
பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் தமது உரையில் புகலிட இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகள்> பெண்களின் இலக்கிய சமூகச் செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர்.
நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும்> அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி சி. ரவீந்திரன்> குலசிங்கம்> குணேஸ்வரன்> அஜந்தகுமார்> இராகவன்> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> செ. கணேசன்> கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று
செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.
Comments
Post a Comment