“வழக்குச் சொல்லகராதி” நூல் வெளியீடும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டமும்
கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவை 17.07.2015 வெள்ளி முற்பகல் “வழக்குச் சொல்லகராதி” நூல் வெளியீட்டையும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்தையும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்த்தியது. பிரதேச செயலர் ச. சிவசிறீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அ. சிவஞானசீலன் எழுதிய “வழக்குச் சொல்லகராதி” என்ற நூல் வெளியிடப்பட்டது. நூல் தொடர்பான உரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை பிரதேச செயலரிடம் இருந்து எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதியை புளியங்குளம் ஆரம்பப்பாடசாலை ஆசிரியர் திரு செ. லக்மிகாந்தன் பெற்றுக்கொண்டார்.
“தமிழ்ப்பண்பாட்டில் ஆடிப்பிறப்பு” என்னும் பொருள்பற்றி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை..” என்ற பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இறுவெட்டின் முதற்பிரதியை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பிரதேச செயலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அற்புதனின் இசையில் திருமதி ஜெயபாரதி கௌசிகன் மேற்படி பாடலை பாடியுள்ளார். அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன் & ஹரிஸ்.
மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
Comments
Post a Comment