"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, October 29, 2017

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு...



- குலசிங்கம் வசீகரன்

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டம் ஏற்பாட்டில் இன்று நிகழ்வுகளில் இடம்பெற்று இருந்தன. நிகழ்வுகள் திரு அ. யேசுராசா அவர்களின் தலைமையில் மாலை 3.00 மணிக்கு குவிமாட கேட்போர் கூடத்தில் ஆரம்பித்தன..

* எனது வாசிப்பனுபவங்கள் பற்றி - சி. ரமேஷ், அகிழினி நந்தகுமார் மற்றும் ச. சத்தியத்தேவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

* நானும் எனதொரு கவிதையும் என்ற தலைப்பில் "திரு சோ. ப அவர்கள் "என்னளவில் பெண்ணியம்" என்ற கவிதை பற்றியும்,பிரியாந்தி அருமைத்துரை அவர்கள் "அனாமிகா (கடவுளால் கைவிடப்பட்டவள்)" என்ற கவிதையை பற்றியும், சு.குணேஸ்வரன் அவர்கள் "சபிக்கப்பட்ட உலகு-1" ,"சபிக்கப்பட்ட உலகு -2" என்ற கவிதைகள் பற்றியும்,த.அஜந்தகுமார் அவர்கள் "பல்லி-நான்-அவள்-வீடு" என்ற கவிதை பற்றியும், கு.றஜீபன் அவர்கள் "தேவகுமாரர்களின் வருகை", "குட்டி முயல்களின் கதை" ஆகிய கவிதைகள் பற்றியும் உரையாற்றினார்கள்.

* "நானும் எனதொரு சிறுகதையும்" என்ற தலைப்பில்,உடுவில் அரவிந்தன்,"சுடலைக்குருவி" என்ற சிறுகதை பற்றியும்,
திருமதி கோகிலா மகேந்திரன் , "புலன்களிற்கு அப்பால்" என்ற சிறுகதை பற்றியும் உரையாற்றினார்கள்.

நன்றியுரையினை வாசகர்வட்ட செயற்குழு உறுப்பினர் சி.சித்திராதரன் ஆற்றினார் ...

நன்றி : படங்களும் பதிவும் குலசிங்கம் வசீகரன் முகநூலில் இருந்து


அ. யேசுராசா


சோ. ப

திருமதி கோகிலா மகேந்திரன்

 
கு.றஜீபன்

ச. சத்தியத்தேவன்

சு.குணேஸ்வரன்  


 பிரியாந்தி அருமைத்துரை 

 த. அஜந்தகுமார்


 சி. ரமேஷ்

அகிழினி நந்தகுமார் 


 உடுவில் அரவிந்தன்

சி.சித்திராதரன் 



No comments:

Post a Comment