பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்
பருத்தித்துறை அறிவோர் கூடலின் ஏற்பாட்டில் மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதை நூலின் அறிமுகவிழா 14.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார்.
பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், தொழிலதிபர் திருமதி சக்தி பாலேந்திரா, சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன், இலக்கியச்சோலை து. குலசிங்கம், திருமதி எம்.ஜெயசிறீ(ஜெய பரத சாஸ்திரா) ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். வரவேற்புரையை கவிஞர் தீபச்செல்வன் நிகழ்த்தினார்.
வாழ்த்துரையை சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் நிகழ்த்தினார். வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் கவிதை நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.
நூலின் முதற்பிரதியை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களிடம் இருந்து திலக் ரி. திலகராஜ் (Managing Director, Tilko Jaffna City Hotels) அவர்கள் பெற்று நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்புப் பிரதிகளை திருமதி சக்தி பாலேந்திரா அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
கவிதை நூலின் மதிப்பீட்டுரையை ஆசிரியர் எஸ். ரமேஸ் நிகழ்த்தினார். ஆசிரியர் சு. குணேஸ்வரன் நன்றியுரையையும் நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஏற்புரையையும் நிகழ்த்தினர்.
மேலும் இணைப்புகள்