கவிஞர் கருணாகரனின் “ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்” என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்வு 21.04.2013 காலை 10.30 மணிக்கு வடமராட்சி - இமையாணன் நியூபிறைற் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
மூத்தஎழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நூல் ஆய்வுரையை யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கந்தையா சிறீகணேசன் நிகழ்த்தினார். நூலின் அறிமுகப் பிரதியை ஆறுமுகம் அவர்களுக்கு நிலாந்தன் வழங்கினார்.
சாட்சியுரையை கவிஞர் தானாவிஷ்ணுவும் ஏற்புரையை நூலாசிரியர் கவிஞர் கருணாகரனும் நிகழ்த்தினர். 'தவிர' கலை இலக்கிய சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் நன்றியுரையை கவிஞர் யாத்திரிகன் நிகழ்த்தினார்.
ஒளிப்படங்கள் – துவாரகன்