"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, November 14, 2015

தேவகாந்தனின் "கனவுச்சிறை" அறிமுகம் - கருத்தாடல்




எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் தொடர்பான அறிமுகமும் கருத்தாடலும் 14.11.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் அ.யேசுராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நாவல் பற்றிய கருத்துரைகளை ந. ரவீந்திரன், இ. இராஜேஸ்கண்ணன், சு. குணேஸ்வரன், தி.செல்வமனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை தேவகாந்தன் நிகழ்த்தினார். நெல்லியடி இலக்கிய முற்றத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நன்றியுரையை கிரிஷாந் நிகழ்த்தினார்.
(ஒளிப்படங்கள்  நன்றி : அ.யேசுராசா, கிரிஷாந்)