கரவெட்டி பிரதேச கலாசார பேரவையின் கலைஞர் ஒன்றுகூடலும் ஆற்றுகை நிகழ்வும் அண்மையில் 08.07.2019 அன்று கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. உதவிப் பிரதேச செயலரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் திரு யோன்சனின் வழிகாட்டலில் கலைஞர்கள் தமது ஆற்றுகைகளை நிகழ்த்தினர்.
வாத்தியம் இசைத்தல், வாய்ப்பாட்டு, நாட்டார் பாடல், கூத்துப் பாடல்கள், தனிநடிப்பு, கவிதை வாசித்தல், அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளல் முதலானவை இடம்பெற்றன.
(படங்கள் : துவாரகன்)