"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, October 7, 2012

தமிழ் இலக்கிய விழா ஆய்வரங்கு (திருகோணமலை) - 2012


கிழக்கு மாகாணம் நடாத்திய தமிழ் இலக்கிய விழா ஆய்வரங்கு 06.10.2012 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் 5.30 மணிவரை திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு முதன்மைவிருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என் ஏ. ஏ. புஸ்பகுமார அவர்களும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் எம்.ரி. ஏ. நிஸாம் அவர்களும் சிறப்பு விருந்தினராக டி. டபிள்யு. யு. வெலிக்கல அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல், சிறுவர்களின் வரவேற்பு நடனம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் நிகழ்த்தினார். தொடர்ந்து கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் எம்.ரி. ஏ நிஸாம் உரைநிகழ்த்தினார்.

நிகழ்வில் காலை அமர்வு “தி.த சரவணமுத்துப்பிள்ளை” அரங்கில் பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் “இலங்கை தமிழ் செல்நெறியில் சமகாலப் பதிவுகள்” என்னும் தலைப்பில் சிறுகதை பற்றி சி. ரமேஸ், கவிதை பற்றி கவிஞர் மேமன்கவி, நாவல் பற்றி சு. குணேஸ்வரன், புனைவுசாரா எழுத்துக்கள் பற்றி கே.எஸ் சிவகுமாரன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். 

மாலை அமர்வு “உமர்நெய்னா புலவர்” அரங்கில் பேராசிரியர் சி. மெளனகுரு தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் சிங்கள மொழிபெயர்ப்பில் தமிழ் இலக்கியங்கள் – ஹேமச்சந்திர பத்திரன, தமிழ்மொழிபெயர்ப்பில் சிங்கள் இலக்கியங்கள் – திக்குவல்லை கமால், தமிழுக்கு வந்த அரபுஇலக்கியங்கள் – எம்.எஸ். எம். நியாஸ், தமிழ் சிங்கள நாடக கூட்டு முயற்சிகள் – மு. சதாகரன்; ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். 

கலந்துரையாடலும் நடைபெற்றது. நன்றியுரையை கலாசார உத்தியோகத்தர் எப். பஸீர் மற்றும் வீ. கோணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். கட்டுரைகளின் சுருக்கப்பிரதிகள் வழங்கப்பட்டன. உரையாளர்களின் கட்டுரைகள் பின்னர் நூலுருப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


பதிவு - சு. குணேஸ்வரன்
படங்கள் - நண்பர்கள்

















பத்திரிகை நறுக்கு - நன்றி - ஞாயிறு தினக்குரல் 07.10.2012