வடமாகாண இலக்கிய விழாவின் கலைநிகழ்வும் விருது மற்றும் சிறந்தநூல் பரிசு வழங்கும் நிகழ்வும் 18.12.2012 யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் பண்பாட்டு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.ஆளுநர் விருது, 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கான சிறந்தநூல் விருது வழங்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
பண்பாட்டு ஊர்வலத்திலும், தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளிலும் பங்குபற்றிய பிள்ளைகளின் ஆர்வமும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களின் உழைப்பும் என்றும் மதிக்கத்தக்கது. அந்நிகழ்வுகள் என்னைப் பெரிதும் கவர்ந்ததனால் ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகிறேன்.
படங்களும் பதிவும் - சு. குணேஸ்வரன்