"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, December 19, 2015

மலேசிய - தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் 2015




மலேசிய - தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் 14.12.2015 பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈழ மற்றும் மலேசிய இலக்கிய போக்குப் பற்றிய உரைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. ஞானகுமாரன் ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்

ஒளிப்படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி : அ.யேசுராசா

தமிழ்த்தாய் வாழ்த்து



ஓய்வுநிலைப் பேராசிரியர் சிவலிங்கராசா



எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

மலேசிய - இலங்கை எழுத்தாளர், ஊடகர், கவிஞரின் ஒளிப்படம்.

எழுத்தாளர் இராஜம் காளியப்பன் (மலேசியா)

கல்வியியலாளர், பன்னீர்ச்செல்வன் (மலேசியா)

விரிவுரையாளரும் கவிஞருமான பா. அகிலன்


பேராசிரியர் என். ஞானகுமாரன்

விமர்சகர் அ.யேசுராசா 

பேராசிரியர் ம. இரகுநாதன்

எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன்

நன்றியுரை ; தி. செல்வமனோகரன்


வானொலி ஊடகர் ப. பார்த்தசாரதி (மலேசியா)


முனைவர் சேகர் நாராயணன் (மலேசியா)

கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்.

பெ. இராஜேந்திரன் (மலேசியா)

எழுத்தாளர் சேகர் (மலேசியா)

கவிஞர் சோ. பத்மநாதன்

தாயகம் இதழாசிரியர் க. தணிகாசலம்

Saturday, November 14, 2015

தேவகாந்தனின் "கனவுச்சிறை" அறிமுகம் - கருத்தாடல்




எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் தொடர்பான அறிமுகமும் கருத்தாடலும் 14.11.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் அ.யேசுராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நாவல் பற்றிய கருத்துரைகளை ந. ரவீந்திரன், இ. இராஜேஸ்கண்ணன், சு. குணேஸ்வரன், தி.செல்வமனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை தேவகாந்தன் நிகழ்த்தினார். நெல்லியடி இலக்கிய முற்றத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நன்றியுரையை கிரிஷாந் நிகழ்த்தினார்.
(ஒளிப்படங்கள்  நன்றி : அ.யேசுராசா, கிரிஷாந்)

















Sunday, October 4, 2015

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவுவிழா



வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வுகள் 04.10.2015 ஞாயிறு காலை, நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றன. சட்டத்தரணி அ.க நடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் “முத்து” என்ற சிறப்பு மலர் வெளியீடு, கவியரங்கம், நடனம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்ட ஓய்வுநிலை அரச அதிபர் திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் வரவேற்புரையை கழகத் தலைவர் வ.சிவச்சந்திரதேவன் அவர்களும், வாழ்த்துரையை இலங்கைவங்கி ஓய்வுநிலைப் பொது முகாமையாளர் திரு க. பாலசுப்பிரமணியம் அவர்களும், தொடக்கவுரையை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி. நந்தகுமார் அவர்களும் நிகழத்தினர். நிகழ்வில் கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. கவியரங்கில் சித்திரா சின்னராஜன், அ.பௌநந்தி, சு.குணேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர். “முத்து” மலர் பற்றிய உரையை ஓய்வுபெற்ற அதிபர் கி. நடராசா நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.