வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வுகள் 04.10.2015 ஞாயிறு காலை, நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றன. சட்டத்தரணி அ.க நடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் “முத்து” என்ற சிறப்பு மலர் வெளியீடு, கவியரங்கம், நடனம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்ட ஓய்வுநிலை அரச அதிபர் திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் வரவேற்புரையை கழகத் தலைவர் வ.சிவச்சந்திரதேவன் அவர்களும், வாழ்த்துரையை இலங்கைவங்கி ஓய்வுநிலைப் பொது முகாமையாளர் திரு க. பாலசுப்பிரமணியம் அவர்களும், தொடக்கவுரையை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி. நந்தகுமார் அவர்களும் நிகழத்தினர். நிகழ்வில் கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. கவியரங்கில் சித்திரா சின்னராஜன், அ.பௌநந்தி, சு.குணேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர். “முத்து” மலர் பற்றிய உரையை ஓய்வுபெற்ற அதிபர் கி. நடராசா நிகழ்த்தினார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.