"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, March 31, 2012

‘என் கடன்’ கவிதைநூல் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வும்





யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் வே.ஐ வரதராஜனின் ‘என் கடன்’ என்ற கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா 31.03.2012 சனிக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கலாநிதி செ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

வரவேற்புரையை இலங்கை இலக்கியப் பேரவை செயலாளர் சி. சிவதாசன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை யாழ்பல்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி நிகழ்த்தினார். நூலின் முதன்மைப் பிரதியை செ. செல்வநாதன் பெற்றுக்கொண்டார்.

மதிப்பீட்டுரைகளை கவிஞர் சோ. பத்மநாதன் மற்றும் விரிரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையையை நூலாசிரியர் ஐ. வரதராஜன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஐயாத்துரை ஞாபக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. விருதுரையை யோஜேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்தினார். விருதினை மூத்த எழுத்தாளர் தெணியான் வழங்கிச் சிறப்பித்தார்.

2009 ஆம் ஆண்டுக்குரிய கவிஞர் ஐயாத்துரை விருதினை அல் அஸமத் எழுதிய ‘குரல் வழிக்கவிதைகள்’ என்ற நூலும் 2010 ஆம் ஆண்டுக்குரிய கவிஞர் ஐயாத்துரை விருதினை கவிஞர் சோ. பத்மநாதனின் ‘சுவட்டெச்சம்’ என்ற நூலும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றியுரையை யாழ் இலக்கிய வட்ட செயலாளர் கிருபானந்தா நிகழ்த்தினார்.

பதிவு - சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் வ. வித்தியாபரன்













4 comments:

  1. நிகழ்வில் கலந்துகொண்டேன்.சிறப்பான நிகழ்வு.உங்கள் பதிவும் மிகத் தேவையான ஒன்று.நன்றியும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. நன்றி தாட்சாயணி

    ReplyDelete
  3. படங்களுக்குப் பதிலாக/அல்லது குறைத்துக்கொண்டு சில கவிதைகளை நூலிலிருந்து அள்ளித்தெளித்திருக்கலாமே? நன்றி.

    ReplyDelete
  4. நூலிலிருந்தும் சில கவிதைகளையும் அள்ளீத்தெளித்திருக்கலாமே?

    ReplyDelete