பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்
ஈழத்திலிருந்து வெளிவரும் ‘நீங்களும் எழுதலாம்’ கவிதை இதழ் வாசகர் வட்டத்தினரின் ஏற்பாட்டில் நூல் வெளியீடு மற்றும் அறிமுக நிகழ்வு 06.03.2011 ஞாயிறு காலை தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். மேற்படி நிகழ்வில் ‘நீங்களும் எழுதலாம்’ கவிதை இதழில் இருந்து கடந்த 6 இதழ்கள்வரை வெளிவந்த கவிதைகளும் கவிதை தொடர்பான கட்டுரைகளும் தொகுக்கப்பட்ட ‘கவிதையும் கவிஞனும்’ என்ற நூல் வெளியீடும்; ஷெல்லிதாசனின் ‘செம்மாதுளம்பூ’ கவிதைநூல் அறிமுகமும் இடம்பெற்றன.
நிகழ்வில் வரவேற்புரையை அல்வையூர் கவிஞர் கே.ஆர் திருத்துவராஜா நிகழ்த்தினார். நூல்களின் வெளியீட்டுரையை தாயகம் ஆசிரியர் க.தணிகாசலம் நிகழ்த்தினார். முதன்மைப்பிரதியை ஓய்வுபெற்ற பிரதேசசபைச் செயலாளர் வே.சிவராஜலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கவிதையும் கவிஞனும் நூலுக்கான மதிப்பீட்டுரையை புலோலியூர் வேல். நந்தகுமார் நிகழ்த்தினார். செம்மாதுளம்பூ நூலுக்கான மதிப்பீட்டுரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். ஏற்புரைகளை எஸ்.ஆர் தனபாலசிங்கம்,ஷெல்லிதாசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வின் படங்கள் சில
No comments:
Post a Comment