"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, October 2, 2011

அறிவோர் ஒன்றுகூடல் –பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப் பகிர்வு




 பருத்தித்துறை அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு 02.10.2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. தொடக்கவுரையை து.குலசிங்கம் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமிழ்நாட்டுப் பயணத்தின்போது ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து “பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப் பகிர்வு” இடம்பெற்றது. உரைகளை து. குலசிங்கம், குப்பிழான் ஐ. சண்முகன், ஆங்கில ஆசான் கந்தையா, சு.குணேஸ்வரன், வேல் நந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

உரைகளில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மனிதநேயம், விமர்சனப்பங்களிப்பு, தமிழாய்வுப்பணி, பல்கலைக்கழகப்பணி, அவர் சந்தித்த எதிர்வினைகள் ;ஆகிய பல விடயங்கள் உரையாளர்களால் எடுத்துக் கூறப்பட்டன.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் விருது பெறும் குப்பிழான் ஐ. சண்முகனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதோடு வாழ்த்துக் கவிதையை கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் அவர்கள் சமர்ப்பித்தார்.

இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அறிவோர் கூடல் நண்பர்கள் குழாத்தைச் சேர்ந்த ஆசிரியர் இரத்தினசோதி அவர்கள் தனது மகளின் திருமண நிகழ்வின்பொருட்டு இராப்போசனம் வழங்கி தனது நட்பைத் தெரிவித்தார். கவிஞர் கே.ஆர் திருத்துவராஜா அவர்கள் நன்றியுரை கூறினார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்












பதிவு - சு.குணேஸ்வரன்
படங்கள் - சுதர்சன்,குணேஸ்வரன்

2 comments:

  1. தகவலுக்கு நன்றி. நண்பர்களைக் கண்டது சந்தோசம்.
    விருந்து வழங்கிய இரத்தினசோதி அவர்களுக்கு நன்றி. மணமக்களுக்கு வாழ்த்து.

    ReplyDelete