கரணவாய் அண்ணாசிலையடி ‘வள்ளுவர் சனசமூக நிலையம்’ கடந்த 15.10.2011 அன்று தமது சனசமூகநிலையத்தின் 50 வது நிறைவு விழாவினையொட்டி ‘வள்ளுவம்’ என்ற மலர் வெளியீட்டையும் கலை நிகழ்வுகளையும் நிகழ்த்தியது. நிலையத் தலைவர் சி. தர்மகுலசிங்கம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மேற்படி நிகழ்வில் டாக்டர் வே. கமலநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நூல் வெளியீட்டுரையை இ. இராஜேஸ்கண்ணனும் நயப்புரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். அரங்க சிறப்புரையை தெணியான் நிகழ்த்தினார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்கள், 50 வது நிறைவுவிழாப் போட்டியில் பங்குபற்றிய வெற்றியாளர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் நிலையத்தின் செயற்பாட்டுக்கு முன்னோடியாக இருந்த மூத்தவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் நிகழ்வுகளின் படங்கள் சில.
பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்
வள்ளுவர் ச.ச நிலையத் தலைவர் சி. தர்மகுலசிங்கம்
டாக்டர் வே. கமலநாதன்
விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன்
சு. குணேஸ்வரன்
எழுத்தாளர் தெணியான்
திருமதி தி. அன்னலிங்கம்
(செயலாளர் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை)
த. புவனேந்திரன்
(கிராம சேவையாளர், கரணவாய் வடக்கு)
கு. பாஸ்கரன்
(அதிபர், கரணவாய் மணியகாரன்தோட்டம் அ.த.க. பாடசாலை)
கொ. குணசிங்கம்
(கரவெட்டி ச.ச நிலையங்களின் சமாசத் தலைவர்)
க. இரத்தினம்
(கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்)
மா. பரமானந்தம்
(முகாமையாளர், யாழ்ப்பாணம் தேசிய சேமிப்பு வங்கி- மேற்தரக்கிளை)
ஆ. மகேந்திரம்
கௌரவிக்கப்பட்ட மூத்த உறுப்பினர்கள்
பரிசில் வழங்கும் நிகழ்வு
பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்
வள்ளுவனுக்கு விழா எடுப்பவர்கள் கரணவாய் மக்களே அந்தவகையில் வள்ளுவர்
ReplyDeleteசனசமூகநிலையமும் பாராட்டுக்குரியது.
வதிரி.சி.ரவீந்திரன்
This comment has been removed by the author.
ReplyDeleteஒரு கிராமம் ஒற்றுமையாக ஒரு விழா எடுத்திருக்கிறது. அவர்கள் பாராட்டுக்குரியவர்களே! வரவுக்கு நன்றி அண்ணா.
ReplyDelete