சிறுவர் பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு
அல்வாயூர் மா . அனந்தராசனின் ‘சின்னத்தம்பி வாடா’ என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டுவிழா அண்மையில் கொற்றாவத்தை செட்டிதறை சித்திவிநாயகர் ஆலய மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
வடமராட்சி கலை இலக்கிய சுவைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆசிரியர் தி. சுபாகரன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் வெளியீட்டுரையை இராஜேஸ்கண்ணனும், நயப்புரைகளை இயல்வாணன், குணேஸ்வரன்ஆகியோர் நிகழ்த்தினர். பருத்தித்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். வாழத்துரைகளை கொற்றை பி. கிருஷ்ணானந்தன், அதிபர் கி. இராசதுரை, செ. சதானந்தன், பருத்தித்துறை கலாசார உத்தியோகத்தர் செல்வசுகுணா, ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை ஆசிரியர் வீ. வீரகுமார் நிகழ்த்தினார்.
ஆறு பாடல்களைக் கொண்ட இந்த ஒலிநாடாவில் மா. அனந்தராசன், செல்விகள் வீ. துஷியா, வை. வைஷ்ஷாளினி, வை.வைஷ்மினி ஆகியோர் பாடியுள்ளனர். எஸ். திருக்குமரன் (கீபோட்), எஸ். சேதுராஜ் (தபேலா), க. குருபரன் (ஒலிப்பதிவு) ஆகிய இளைஞர்களின் முயற்சியும் பாராட்டத்தக்கது.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
No comments:
Post a Comment